சமூக ஆர்வலர்களின் கதாநாயகனாக செயல்படும் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி அவர்களுக்கு நன்றி.
கடந்த மாதம்
தெருநாய்களால் குதறப்பட்டு கன்னத்தில் ஓட்டையுடன் படுகாயம் அடைந்த குழந்தைக்கு
அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கப்படாததால் இந்த அவலத்தை மாவட்ட
ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று சட்டபஞ்சாயத்து இயக்கம் சார்பாக மாவட்ட
ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டு
குழந்தைக்கு உயர்தர சிகிச்சைகளை வழங்கவும் தொடர்ந்து குழந்தையின் சிகிச்சை
குறித்து ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல்
தெரிவிக்க வேண்டும் எனவும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார், இதையடுத்து
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் தலைமையில் சிறப்பு
குழுவினர் தரமான சிகிச்சையளித்து தற்போது குழந்தை நல்லகுணமடைந்து வருகின்றது,
இன்று மாவட்ட
ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்க குழந்தையின் பெற்றோருடன் வருகை தந்தனர்.
மாவட்ட ஆட்சியருக்கு
குழந்தை பூங்கொத்து கொடுத்து தனது நன்றியை தெரிவித்தது.



No comments:
Post a Comment