மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday 29 September 2017

இஸ்ரோ சம்பந்தப்பட்ட செய்திகளை புறக்கணிக்க நெல்லை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் முடிவு




நெல்லை பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு - இஸ்ரோ சம்பந்தப்பட்ட செய்திகளை புறக்கணிக்க நெல்லை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் முடிவு

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே அமைந்துள்ளது மகேந்திரகிரி இஸ்ரோ மையம் மிகவும் பாதுகாப்பு பகுதியான இந்த மையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் பகுதியில் பாறை ஒன்று பிளவு பட்டிருப்பதாகவும், புகை வந்து கொண்டு இருப்பதாகவும் புதிய தலைமுறை தொலைக்காட்சி வள்ளியூர் செய்தியாளர் ராஜீகிருஷ்ணா, நெல்லை செய்தியாளர் நாகராஜன், பணகுடி தினகரன் பத்திரிகை செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்திகளை அனுப்ப அது தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழில் பிரசுரமானது.

 இந்நிலையில் மையம் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக பணகுடி காவல் ஆய்வார் ஜோன்ஸ் பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் இ.பி.கோ 469.505.507 ஐ.டி.பிசி 67 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இதனை கண்டித்து வழக்கை திரும்ப பெற வேண்டும் இஸ்ரோ பாதுகாப்பு அதிகாரிகளிடமும் கிராம மக்களிடமும் எந்த விசாரணையும் செய்யாமல் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஜோன்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை பத்திரிகையார்கள் மன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள நெல்லை, குமரி, தூத்துகுடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 150 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள்; நேற்று (29-09-2017) நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது  அவர்களை தடுத்த போலிஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் ஒருவருடைய செல்போன் உடைந்தது. போலிஸ் வேனில் ஏற்றி திருமண மண்டபம் ஒன்றிற்கு கொண்டு சென்றனர். பின்னர் டிஜஜி-யிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். அங்கு 1 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சு வார்த்தை நடந்தது. முன்னாள் நெல்லை பத்திரிகையாளர் மன்ற தலைவர் அய்.கோபால்சாமி தலைமையில் 10 செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை முடிவில் புகார் கொடுத்தவர் காவல் ஆய்வாளாரை விட இஸ்ரோ மையத்தில் பாதுகாப்பு பிரிவில் பெரிய பொறுப்பில் இருப்பதால் ஒரு நாள் அவகாசம் போலிஸ் தரப்பில் கோரப்பட்டது. பத்திரிகையாளர்களும் அதை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். சென்னையில் பத்திரிகையாளர்கள் டிஜிபியை சந்தித்து அவர்கள் எடுக்கும் முடிவுக்கு விட்டுவிடுவதாக தெரிவித்தனர். மேலும் இஸ்ரோ சம்பந்தப்பட்ட எந்த ஒரு செய்தியையும் வெளியிட போவது இல்லை என முடிவு எடுக்கப்பட்டது. இச்சம்பவத்துக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ உட்பட கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.




விக்கிரமசிங்கபுரம் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.




விக்கிரமசிங்கபுரம் நகரசபையில் குடிநீர் கட்டணம் தற்போது மாதம் 50 ரூபாயாக உள்ளது. இதனை உயர்த்துவதற்கு நகரசபை நிர்வாகம் முடிவு செய்தது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், விக்கிரமசிங்கபுரம் நகரசபை ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இதுசம்பந்தமாக நகரசபை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. 

இந்த நிலையில் குடிநீர் கட்டண உயர்வுக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சியினர், பொதுமக்கள் நேற்று நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம், நகரசபை ஆணையாளர் பிரேம் ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், குடிநீர் கட்டண உயர்வு குறித்து அனைத்து கட்சி அமைப்பினர், பொதுமக்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என கூறியதை அடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். திடீரென நடந்த இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து நகரசபை அலுவலகத்தில் குடிநீர் கட்டணம் உயர்வு தொடர்பாக நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

செய்தி மற்றும் படம் 
திரு.முத்து.


ஆலங்குளத்தில் பரிதாபம் - டெங்கு காய்ச்சலுக்கு பட்டதாரி பெண் பலி.





நெல்லை மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் டெங்கு காய்ச்சலுக்கு ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் முத்துவேல் ராஜன் (வயது 16), ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு காவலாக்குறிச்சியை சேர்ந்த கற்பகவள்ளி (19), ஆலங்குளம் நந்தவனகிணறு தெருவை சேர்ந்த மகேந்திரன் (10) ஆகியோர் பலியாகி விட்டனர். 

இந்த நிலையில் ஆலங்குளத்தை சேர்ந்த மேலும் ஒரு இளம்பெண் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். ஆலங்குளம் நந்தவனகிணறு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் மரிய ரோஸ்லின் (25). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஆலங்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில், அவருக்கு டெங்கு காய்ச்சல் என தெரிந்ததும் கடந்த வாரம் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரிய ரோஸ்லின் பரிதாபமாக இறந்தார். டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தற்போது ஆலங்குளம் மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் அதிகமானோர் மர்ம காய்ச்சலால் அவதி அடைந்து வருகின்றனர். சுகாதார துறையினர் இந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து, சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லையில் இலவச மருத்துவ முகாம்.





பாளை யுவராஜ் சமுதாய கல்லூரி ஸ்ரீசக்தி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் பாளை சவுராஷ்டிரா பவனத்தில் நடைபெற்றது. 

பாளை யுவராஜ் சமுதாய கல்லூரி  முதல்வர் எஸ்.வி.கணேஷன் வரவேற்புரையாற்றினார்.   மாவட்ட நீதிமன்ற கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மதிதா இந்து கல்லூரி தமிழ்துறை  பேராசிரியர் சுந்தரம் சிறப்புரை ஆற்றினார்.

இம்முகாமில் பல்வேறு எலும்பு மூட்டு தேய்மானம், முதுகுவலி, தண்டுவடம், குதிங்கால் வலி, எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டது.    பெண்கள் சம்பந்தமான சகல நோய்களுக்கும்  மகப்பேறு  சிகிச்சையும் இலவச ஆலோசனை அளிக்கப்பட்டது. 

இம்முகாமில் மருத்துவர்கள் வெங்கடேஷ்பாபு, சுமதி ஆகியோர் சிகிச்சை மேற்கொண்டனர்.  இம்முகாமில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.


செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


தூய சவேரியார் கல்வியல் கல்லூரியில் 2003 - 04 இளங்கலை கல்வியல் மாணவர்கள் சந்திப்பு.





பாளை தூய சவேரியார் கல்வியல் கல்லூரியில் 2003-04 இளங்கலை கல்வியல்   மாணவர்கள்  சந்திப்பு நிகழ்ச்சி  கல்லூரியில் நடைபெற்றது.

முன்னாள் மாணவர் சங்க செயலாளர் மைக்கேல் ஜெ லியோ வரவேற்புரையாற்றினார். அதனை  தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் அறிமுகம் மற்றும் அனுபவ பகிர்வு நடைபெற்றது. முன்னாள் மாணவர் சங்க இயக்குனர் அருட்தந்தை   ஜான்குவால்பர்ட்,    கல்லூரி முதல்வர்  பிரிட்டோ அலெக்ஸாண்டர் தலைமையுரையாற்றினார். 

மேலும் கல்லூரி ஆசிரியர்கன் மற்றும் அலுவலர்களை சால்வை அணிவித்து கௌரவித்தனர்.   பேராசிரியர் ஜான்லாரன்ஸ் ஏற்புரையாற்றினார். மாணவ-மாணவிகளின் கலை    நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர்  டேனியல் நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படம் 
திரு.முத்து.


ஸ்ரீபிரம்மஜோதி ஆண்டவர் பிறந்த நாள் மற்றும் நெல்லை ஐ.டி.எப்.சி பாரத் லிமிடெட்டின் ஆண்டு விழா.





ஸ்ரீபிரம்மஜோதி ஆண்டவர் பிறந்த நாள் மற்றும் நெல்லை .டி.எப்.சி பாரத் லிமிடெட்டின் ஆண்டு விழாவை  முன்னிட்டு நெல்லை .டி.எப்.சி பாரத் லிமிடெட்டின்  நிறுவனர் தேவராஜ் ஆசியுடன் நெல்லை டவுண் கருப்பந்துறை ஸ்ரீபிரம்மவித்தைஅத்யாசி சுவாமிகள் ஜீவசமாதியில்  அன்னதானம் வழங்கப்பட்டது.

.டி.எப்.சி பாரத் லிமிடெட்டின்நெல்லை மண்டல மேலாளர் ஸ்ரீவட்சன் தலைமையில்   அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் பகுதி மேலாளர் பிரபாகரன்,   கிளை மேலாளர் முத்துகிருஷ்ணன், துணை கிளை மேலாளர்கள் பொன்னுசாமி,  அருண் மற்றும் கிளை கணக்காளர்கள்  நிர்மல்,  அருண், தணிக்கை   துறையினர்  சந்தானம், முத்துகுமார், கிளை  பணியாளர்கள்,      உறுப்பினர்கள் உட்பட  பொது  மக்கள்    திரளாக    அன்னதான   நிகழ்ச்சியில்   கலந்து கொண்டனர்.



செய்தி மற்றும் படம் 
திரு.முத்து.


தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரியில் இன்டிகோ 2017 நிறைவு விழா.




பாளை தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரியில் இன்டிகோ 2017 துறைகளுக்கிடையோன கலைப்போட்டிகள் நடைபெற்றது.    இவ்விழாவின் நிறைவு விழா நேற்று   வியாழக்கிழைமயன்று  நடைபெற்றது. 

செல்வன் ராமச்சநிதிரன் வரவேற்று  பேசினார்.   திரைப்பட பாடலாசிரியர் பாலவர்    அறிவுமதி  சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் பிரிட்டோ வாழ்த்துரையாற்றினார்.   மாணவர்  புலத்தலைவர் யூஜின்பிராங்கோ நன்றியுரையாற்றினார்.   


நிகழ்சிகளை மாணவர் சங்க மாணவி ராஜவேணி, அதிபர் தாமஸ் அலெக்ஸ்,செயலாளர்  அந்தோணிசாமி  மற்றும் விழா ஏற்பாடுகளை யூஜின்பிராங்கோ சிறப்பாக செய்திருந்தார்  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி   முதல்வர்  பிரிட்டோ  பரிசுகளை வழங்கினார்.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.