பாளையங்கோட்டை
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் நூலகம் மற்றும்
தகவல் அறிவியல் துறை மற்றும் மாணவ வாசகர் வட்டம் இரண்டும் இணைந்து இந்திய நூலகவியலின்
தந்தை முனைவர் திரு.எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று “நூலகர் தினம்” கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு)
பேராசிரியர் திரு.ரஃபி அகமது அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றுப் பேசும் போது:
“புத்தகங்கள் ஒரு நண்பனைப் போன்றது. ஒரு நல்ல புத்தககம் நம்மை நன்கு
வழிநடத்தும். எனவே, அனைவரும்
புத்தகங்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்றார்.
கல்லூரியின்
சுயநிதிப்பிரிவின் இயக்குநர் முனைவர்.திரு.அப்துல் காதர் அவர்கள் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது:
“கல்லூரி நூலகத்தில் உள்ள ஒவ்வொரு
புத்தகத்தையும் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவரும் வருடத்திற்கு
குறைந்தபட்சம் ஒரு புத்தகத்தை விலைக்கு வாங்கிப் படிக்க வேண்டும்” என்றார்.
கல்லூரி நூலகர்
முனைவர்.திரு.ஆர்.ஆர்.சரவணக்குமார் அவர்கள் இந்திய நூலகவியலின் தந்தை
முனைவர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியும், அவர் நூலக சமுதாயத்திற்கு ஆற்றியப் பங்கு
பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
கல்லூரி உதவி
நூலகர் திருமதி.எம்.பாத்திமா பீவி அவர்கள் ‘வாசகரின் தேவை பற்றிப் பேசினார்.
கல்லூரி துணை
நூலகர் திருமதி.எஸ்.அந்தோணி ஆரோக்கியவதி அவர்கள் “பொதுநூலகங்களில் எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின்
பங்கு” என்பது பற்றிப் பேசினார்.
கல்லூரி துணை
நூலகர் திரு.எம்.மணி அவர்கள் “நூலகத்தில் மின்னணு
வளங்களின் பயன்பாடு” என்பது பற்றியும்,
எதிர்காலத்தில் நூலகத்தில் மின்னணு
வளங்களின் அவசியம் பற்றியும் விளக்கிப் பேசினார்.
முன்னதாக முதுகலை
விலங்கியல் முதலாம் ஆண்டு மாணவர் திரு.சித்தையா அனைவரையும் வரவேற்றார். இறுதியாக முதுகலை இயற்பியல் முதலாம் ஆண்டு மாணவர் திரு.வள்ளி கணேஷ்
அனைவருக்கும் நன்றி கூறினார்.
இவ்விழாவில்
கல்லூரி மாணவப் பேரவைத் தலைவர் திரு.ஜெ.அகமத் தமிமுல் அன்சாரி, நூலக உதவியாளர் திரு.தாஜூதீன், நுஸ்ரத் ஜஹான் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்;டனர்.
விழா ஏற்பாடுகளைக்
கல்லூரி நூலகர் முனைவர். திரு.ஆர்.ஆர்.சரவணக்குமார், உதவி நூலகர் திருமதி.எம்.பாத்திமா பீவி, துணை நூலகர்கள் திரு.அந்தோணி ஆராக்கியவதி, திரு.எம்.மணி மற்றும் நூலக உதவியாளர்கள் தாஐதீன்,
நுஸ்ரத் ஜஹான், சித்தையா, வள்ளி
கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment