மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 25 August 2017

19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வாபஸ் குறித்து கவர்னர் முடிவு எடுப்பார் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி




தமிழகத்தில் நிலையான ஆட்சி இருக்க வேண்டும் என்பது தான் பா.ஜனதா வின் நிலைப்பாடு. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு   தாங்கள் அளித்த ஆதரவை வாபஸ்பெறுவதாக கவர்னரிடம் 19 எம்.எல்.ஏ.க்கள் மனு   அளித்ததால் அ.தி.மு.க. ஆட்சிக்கு மிகப்பெரிய கேள்விக்குறி ஏற்பட்டு   உள்ளது. 

19 எம்.எல்.ஏ.க்களும் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்குமா? என்பது பற்றி தெரியவில்லை. முதலில் அ.தி.மு.க.வின்  தலைமை யார்? என்பது தெளிவாக வேண்டும். ஏற்கனவே,முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று   ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறிய போது சட்டசபை கூட்டம்  நடந்து   கொண்டு இருந்தது. 

 இதனால் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது அந்த சூழ்நிலை இல்லை. எனவே இதுதொடர்பாக கவர்னர் ஆராய்ந்து முடிவு எடுப்பார்.மத்திய அரசும், தமிழக அரசும் வளர்ச்சி திட்டங்களை முன் நின்று   நடத்தும். ஆனால் ஆட்சியை பாதுகாக்க அந்த கட்சியால் தான் முடியும். அதற்கும் மத்திய அரசுக்கும் எந்தசம்பந்தமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment