மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday 31 July 2017

மெட்ரிக்குலேசன் நியூஸ் பத்திரிகையின் துணை ஆசிரியராக திரு அனந்தராமன் நியமிக்கப்படுள்ளார்.



மெட்ரிக்குலேசன் நியூஸ் பத்திரிகையின் துணை ஆசிரியராக திரு அனந்தராமன்  நியமிக்கப்பட்டதையும் நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டதையும் பாராட்டி பொதுச்செயலாளர்  நந்தகுமார் பொன்னாடை போர்த்தினார். அருகில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (TUJ)  மாநிலத் தலைவர் DSR சுபாஷ்வலது புறம் நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள்  சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் செ.பா.தவசிக்கனியும்பின்பக்கம் தேசத்தின் நம்பிக்கை பத்திரிகை ஆசிரியர் H.கமால் பாட்சா மற்றும் கல்வியாளர்களும் பத்திரிகையாளர்களும் உள்ளனர்.

குற்றாலம் சாரல் திருவிழாவில் யோகா நிகழ்ச்சி - பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.







குற்றாலம் சாரல் திருவிழாவில் யோகா நிகழ்ச்சி நடத்திய கலைஞர்கள் மற்றும் மாணவிக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் சாரல் திருவிழாவில் யோகா நிகழ்ச்சி நடத்திய கலைஞர்கள் மற்றும் மாணவிக்கு பரிசுகள் வழங்கும் விழா கலைவாணர் கலையரங்கில் இன்று (30.07.2017) நடைபெற்றது. 

இவ்விழாவில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் திரு.ச.ராஜேந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு செயற்பொ றியாளர் திரு.ஆர்.பாஸ்கரன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக யோகாசனம் செய்த கீழப்புலியூர் செயின்ட் மைக்கேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி நந்தினிதேவிக்கும், நாகர்கோவில் வாழும் கலை யோகா கலைக்குழுவினருக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.

இவ்விழாவில் திருநெல்வேலி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் திரு.ரெ.சிதம்பரம், தென்காசி வாட்டாட்சியர் திரு.முருகன், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.கி.கணேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.நெல்சன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து, வள்ளி நாடகமன்றக் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி, யமுனா ஸ்டேஜ் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி, திரைப்படப் புகழ் மாற்றுத் திறனாளி பிரபு குழுவினரின் நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

அறந்தாங்கி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவிலில் சொல்லரங்கம்.





அறந்தாங்கி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழாவில் ஜோதிடர் கரு. கருப்பையாவின் “சொல்லரங்கம்” நடைபெற்றது. இதில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லையில் திருக்குறள் பேச்சு போட்டி மற்றும் ஓவிய போட்டி.



நெல்லையில் திருக்குறள் பேச்சு போட்டி மற்றும் ஓவிய போட்டியினை ஸ்ரீ ராம் சீட்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகிய ஸ்ரீ ராம் இலக்கிய கழகம்  பள்ளி மற்றும் கல்லூரி  மாணவ , மாணவியரிடையே நடத்தியது. இந்த போட்டியில் சுமார் 548 மாணவ , மாணவியர் பங்கேற்றனர்.

நெல்லை சாப்டர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற  இந்த போட்டிக்கு  அதன் தொடக்க விழாவில் நிறுவனத்தின் மண்டல மேலாளர் கேசவன் வரவேற்புரையாற்றினார் .சாப்டர் மேல்நிலை பள்ளியின் தலைமையாசிரியர் ஓபேத் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். பள்ளியின் தாளாளர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார்

இந்த திருக்குறள் பேச்சு போட்டி மற்றும் ஓவிய போட்டியானது இடைநிலை, உயர்நிலை,மேல்நிலை, மற்றும்  கல்லூரி என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இடை நிலை பிரிவில் 6,7,8  ஆம் வகுப்பு மாணவ மாணவியரும் உயர்நிலை பிரிவில் 9,10 ஆம் வகுப்பு மாணவ மாணவியரும் , மேல்நிலை பிரிவில்   11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியரும் கல்லூரி பிரிவில் இளநிலை, முது நிலை பட்டப்படிப்பு, பொறியியல் , மருத்துவம், பாலி டெக்னிக் மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர். முதல் சுற்று ,அரை இறுதி சுற்று, இரண்டு நிலைகளாக பேச்சு போட்டி  நடை பெற்றது. இறுதி சுற்று  போட்டியானது சென்னையில் செப்டம்பர் 23 அன்று நடைபெற உள்ளது.  ஓவிய போட்டியானது ஒரே  சுற்றாக மண்டல அளவில் மட்டுமே நடத்தப்படுகிறது. பேச்சு போட்டியில் முதல் பரிசுகளை இடை நிலையில் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர் இசக்கியப்பன்  வென்றார். உயர்நிலையில் நாடார் மேல்நிலை பள்ளி மாணவர் கெளதம், மேல் நிலையில் டேனியல் தாமஸ் மெட்ரிக்  மேல்நிலை பள்ளி மாணவியும் , கல்லூரி அளவில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவர் முஹம்மது சம்சுதீன் பரிசுகளை  வென்றார்கள்.

ஓவிய போட்டியில் இடைநிலையில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர் அந்தோணி ஷெரின் உயர் நிலையில் சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி  மாணவி இசக்கி ராஜேஸ்வரியும்மேல்நிலையில் ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவர் லவனேஷ்  மற்றும் கல்லூரியில் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி மாணவி நாகலெட்சுமியும் பரிசுகளை வென்றார்கள்.

வெற்றி பெற்ற  மாணவ மாணவியர்களுக்கு காவல் துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் கோப்பை மற்றும் விருதுகளை வழங்கி பேசுகையில் ,” வளரும் தலைமுறையினருக்கு திருக்குறளின் அவசியத்தை சொல்லி தருவதன் மூலம் அவர்களை சிறந்த தலைவர்களாக உருவாக்க முடியும். உலகத்திலே சிறந்த மொழி தமிழ் மொழி . அதனை பிழை இல்லாமல் பேச, கற்க , எழுதி படிக்க நமது குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் . உலகத்திலேயே சிறந்து விளங்கும் திருக்குறளை நாம் அனைவரும் முழுமையாக கற்று அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என  பேசினார்.

தமிழ்நாடு மற்றும் புதுசேரி மாநிலத்தில்  10 மையங்களில் நடைபெறும் இந்த போட்டியின் இறுதி சுற்றில் ஒவ்வோரு  பிரிவிலும் மாநில அளவில் முதல் மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு முதலாம் இரண்டாம், ,மூன்றாம் பரிசுகளாக ரூ.10,000, ரூ.7500, ரூ.5000 ரொக்கம் வழங்கப்படும் ..  . மேலும் முதல் பரிசு பெறும் மாணவரது பள்ளி/கல்லூரிக்கு ஒரு கேடயமும் வழங்கப்படும்.

ஓவிய போட்டியில், மண்டல அளவில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுக்குரிய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்படும்.


மாணவ சமுதாயத்தினரிடையே திருக்குறளின் கருத்துக்களை பரப்பவும் , தமிழாற்றலை வளர்க்கவும், பேச்சாற்றலை பெருக்கவும் , கடந்த 1988 முதல் 30 ஆண்டுகளாக ஸ்ரீராம் இலக்கிய கழகம் தமிழகம் மற்றும் புதுவையில் திருக்குறள் போட்டியினை நடத்தி வருவது குறிப்பிடதக்கது.

Friday 28 July 2017

FX பொறியியல் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா.



நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ல்லூரி முதல்வர் இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். 

ஸ்காட் குழுமங்களின் தலைவர் கிளிட்ட ஸ் பாபு, துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர். றப்பு விருந்தினராக புது டெல்லி பல்கலைக்கழக மாணியக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் தேவராஜ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் பெருமாள் சாமி பட்டம் பெற்றவர்களை பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில் ஸ்காட் குழுமங்களின் செயல் இயக்குநர் மெனான்டஸ், பொது மேலாளர் இக்னேஷியஸ் சேவியர், சுதாகர், நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்திய சுற்றுலாத்துறையில் தமிழம் முதலிடம் : அமைச்சர் வெல்ல மண்டிநடராஜன் பெருமிதம்.





இந்தியாவில் சுற்றுலாத்துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என குற்றாலத்தில் நடந்த சாரல் விழா துவக்க விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார். நெல்லை மாவட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் சாரல் திருவிழா துவக்க விழா நடந்தது. 

விழாவிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி தலைமை வகித்தார். எம்.பி.,வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ.,செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வரவேற்றுப் பேசினார். 

சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குத்துவிளக்கேற்றி சாரல் திருவிழாவை துவக்கி வைத்து பேசும் போது, தமிழகத்தில் 40 இடங்கள் சுற்றுலா ஸ்தலங்களாக திகழ்கின்றன. மலைவாசல் சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, புராதன சிற்பங்கள் சுற்றுலா, படகு குழாம் சுற்றுலா, வனவிலங்கு சரணாலய சுற்றுலா என அவை வகைப்படுத்தப்படுகின்றன. இந்திய சுற்றுலாத்துறையில் அதிக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது தமிழக சுற்றுலாத்துறைதான். இந்திய சுற்றுலாத்துறையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. சுற்றுலா ஸ்தலங்களுக்கு வியாபார நோக்கத்தோடும் மக்கள் வருகின்றன். எந்த மதம் சார்ந்தவர்களையும் எளிதில் ஈர்த்து வருவது சுற்றுலா ஸ்தலங்கள். உடல் நலத்தை பேணவும் பொதுமக்கள் சுற்றுலா செல்கின்றனர். 


தமிழகத்தில் சுற்றுலா சிறந்து விளங்குவதற்கு இங்கு போக்குவரத்து வசதி அருமையாக இருக்கிறது. சாலைகள் சீராக உள்ளன. மின் மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மிக முக்கியமாக தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் எவ்வித அச்சமும் இன்றி அவர்கள் சுற்றுலா ஸ்தலங்களுக்குச் சென்று வருகின்றனர். குற்றாலம் சிறப்பான சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது.. குற்றாலத்திற்கு சமீபத்தில் நான் வந்தபோது இங்கு என்னென்ன தேவைகள் என்பதை அறிந்தேன். இதுகுறித்து முதல்வரிடம் கூறினேன். குற்றாலத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முதல்வர் உறுதியளித்துள்ளார். குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் அடுத்த ஆண்டுக்குள் புனரமைக்கப்படும்.கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை புனரமைக்கப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் சுற்றுலாத் தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது என்றார். 

ருவாய்த்துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் ஆகிய துறைகளின் மூலம் 129 பயனாளிகளுக்கு 59 லட்சத்து 40 ஆயித்து 235 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கி பேசும் போது... தமிழகத்தில் பல்வேறு கலாச்சாரங்கள் உள்ளன. இங்குள்ள சுற்றுலா ஸ்தலங்களில் வெவ்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. குற்றால அருவிகளில் குளித்தால் உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கிறது. குற்றாலம் வந்து சீசனை அனுபவித்தால் பிரச்னைகள் பஞ்சாக பறந்து விடும். குற்றாலம் வந்தால் மனக்கவலைகள் நீங்கி புத்துணர்வு பெறலாம் என்றார்.

விழாவில் எம்.எல்.ஏ..இன்பத்துரை, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய  ணைத் தலைவர் கண்ணன், தாய்கோ வங்கி மாநில துணைத் தலைவர் குற்றாலம் சேகர், தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாப்புலர் முத்தையா, ஆவின் தலைவர் ரமேஷ், நெல்லை சுதா பரமசிவன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர், குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் லிங்கராஜ், மின்வாரிய செயற்பொறியாளர் அருள், தென்காசி ஏ.எஸ்.பி. மணிகண்டன், பி.ஆர்.ஓ,சீனிவாசன், ஏ.பி.ஆர்.ஓ. ஜெகவீர பாண்டியன், அ.தி.மு.க.மாவட்ட முன்னாள் செயலாளர் கே.பி.குமார் பாண்டியன் மற்றும் ;பலர் கலந்து கொண்டனர்.கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.

Thursday 27 July 2017

FX பொறியியல் கல்லூரியில் அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.




பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் APJ அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஸ்காட் குழுமத் தலைவர், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதை தொடர்ந்து சமுதாய நல்லிணக்கத்தை வழியுறுத்தும் வகையில் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களால் மனித சங்கலி நடத்தப்பட்டது. ஸ்காட் குழுமத் தலைவர் முனைவர் எஸ்.கிளிட்டஸ் பாபு அவர்கள் தனது உரையில் டாக்டர் APJ அப்துல்கலாம் அவர்களின் கனவுகளை நினைவாக்கும் வகையில் மாணவர்களின் செயல்திறன் அமையுமாறு வழியுறுத்தினார். 

இவ்விழாவிற்கு ஸ்காட் கல்வி நிறுவனங்களின் பொது மேலாளர் (நிதி) திரு.இக்னேஷியஸ் சேவியர், கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.இளங்கோவன், நிர்வாக அதிகாரி திரு.எஸ்.கிருஷ்ண குமார், கல்லூரி துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  கலந்து கொண்டார்கள்.   

திருநெல்வேலி கோல்டு அரிமா சங்கம் சார்பில் அப்துல்கலாம் 2ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.




திருநெல்வேலி கோல்டு அரிமா சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். A.P.J. அப்துல்கலாம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. பின்னர் மரக்கன்றுகள் நடும் விழாவும் சிறப்பாக நடைபெற்றது. 


விழாவில் சங்க தலைவர் லயன். ராயல் கெளசிக்,  செயலாளர் Eng. T.N.S. லயன்.சுரேஷ், பொருளாளர் லயன்.கருப்பசாமி, லயன்.ராஜா, லயன்.கோபி கண்ணன்,  லயன்.தாமஸ், லயன்.சரவணன், லயன்.S.M.S.முருகேசன், லயன்.M.S.P.முருகன், லயன்.ராமசாமி, லயன்.கந்தவேல், மயிலோசை ஆசிரியர் லயன்.மயூரி ஆறுமுக நயினார் மற்றும் அரிமா நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். 

திருநெல்வேலி கோல்டு அரிமா சங்கம் சார்பில் சரணாலய குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.



திருநெல்வேலி கோல்டு அரிமா சங்கம் சார்பில் சரணாலய குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


திருநெல்வேலி கோல்டு அரிமா சங்கத்தின் சார்பாக லயன். M.S.T. ராஜா அவர்கள் பாலபாக்கியா நகரில் உள்ள சரணாலயத்தில் 75 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் லயன்.ராயல்  கெளசிக், லயன்.கோபிகண்ணன், லயன்.ராமசாமி, லயன்.கந்தவேல், லயன்.சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2ம் ஆண்டு நினைவு தினம் 500 பேர் கண்தானம்



நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் 2ம் ஆண்டு நினைவு தினத்தில் அரவிந்த் கண்மருத்துவமனையில் 500பேர் கண்தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அரவிந்த் கண் மருத்துவமனையின் துணை தலைமை மருத்துவர் மீனாட்சி முன்னிலை வகித்தார் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கிராம உதய நிறுவனர் சுந்தரேசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 500 பேர் கண்தானம் வழங்கும் உறுதிமொழி படிவத்தை அரவிந்த் கண் மருத்துவமனையின் துணை தலைமை மருத்துவர் மீனாட்சியிடம் வழங்கினார்.

மயிலோசை பல்சுவை இதழின் ஆசிரியர் அரிமா மயூரி ஆறுமுகநயினார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அரவிந்த் கண்மருத்துவமனை கண்தான பிரிவு ஒருங்கிணைப்பாளர் சாரதா, கிராம உதய தன்னார்வ தொண்டர் பாலசுப்பிரமணியன், கிராம உதய பகுதி பொறுப்பாளாகள் முருகன், கணேஷன், மயிலோசை நிகழ்ச்சி தொகுப்பாளர் வினோத் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில் கண்தானம் வழங்கியவர்கள் உட்பட மகளிர் சுயஉதவி குழு பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.


நெல்லையில் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா.



நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஏ.ஐ.டி.யு.சி. துணை தலைவர் ராதாகிருஷ்ணன், எச்.எம்.எஸ். தலைவர் சுப்பிரமணியன், பணியாளர் சம்மேளனத்தின் துணைதலைவர் சந்தானம் ஆகியோர் கோரிக்கையை வற்புறுத்தி பேசினார்கள்.


அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13–வது சம்பள பேச்சுவார்த்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்தில் தொ.மு.ச. தலைவர் முருகேசன், செயலாளர் அல்போன்ஸ், சி.ஐ.டி.யு. தலைவர் வின்சென்ட், செயலாளர் காமராஜ், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் குருசாமி, உலகநாதன், பணியாளர் சமமேளனத்தின் நிர்வாகிகள் குமரேசன், பிரம்மநாயகம், புதிய தமிழகம் தொழிற்சங்க செயலாளர் சந்திரன், தே.மு.தி.க. தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், சுடலைமுத்து, சங்கர நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.





         


ஸ்காட் குழுமங்களின் பள்ளிகளான தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பிரான்சிஸ் சேவியர் பள்ளி கூடுகையில்  இன்று (27.07.2017) டாக்டர் அப்துல்கலாம் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. 

நான்காம் வகுப்பு மாணவன் விஷ்ணு  மக்கள் ஜனாதிபதி மாண்புமிகு அப்துல்கலாமின் சாதனைகளையும், கனவுகளையும் குறித்து சொற்பொழிவாற்றினார். 

கலாமின் கனவாம் வல்லரசு இந்தியா 2020 நனவாக மாற மாணவர்களுக்கு சவால் விடுத்தார் மாணவன் விஷ்ணு. தாய்திரு நாடாம் நம் பாரத நாடு எல்லா துறைகளிலும் சிறந்த விளங்க சிறப்பு பிராத்தனையுடன் பள்ளி கூடுகை நிறைவுபெற்றது.

          

Monday 24 July 2017

காரையாறில் ஆடி அமாவாசை விழா கோலாகலம் : 1 லட்சம் பக்தர்கள் திரண்டனர்




காரையாறில் ஞாயிற்றுகிழமையன்று நடைபெற்ற ஆடிஅமாவாசை விழாவை காண லட்சம் பேர் திரண்டனர். பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான காரையாறு வனப்பகுதியில் சொரிமுத்தையன் கோவில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிஅமாவாசை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்

அதுபோல் இந்த ஆண்டும் ஆடிஅமாவாசை விழா தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிஅமாவாசை நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமையன்று காலையில் துவங்கி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை காண ஆலங்குளம். முக்கூடல், அம்பாசமுத்திரம். சேரன்மகாதேவி, வீரவநல்லூர், வி.கே.புரம். கல்லிடைக்குறிச்சி, ஜமின்சிங்கம்பட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாவட்டங்களிலும் பக்தர்கள் ஒருவாரத்திற்கு முன்பே வந்து குவியத்தொடங்கினர்

பக்தர்களின் வசதிக்காக 400 தற்காலிக கழிப்பறைகள், 60 நிரந்தர கழிப்பறைகள், சிறப்பு பஸ் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வி.கே.புரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்து செய்து கொடுக்கப்பட்டிருந்தது.  ஆடிஅமாவாசை விழா துவங்கியது. பக்தர்கள் பொங்கலிட்டு சொரிமுத்தையனாரையும், சங்கிலி பூதத்தானையும் வழிபட்டனர்

பின்னர் மேளதாளம் முழங்க பக்தர்கள் அருள் வந்து சாமியாடினர். அப்போது கூடியிருந்த பொதுமக்கள் சாமியாடியவர்களிடம் குறி கேட்டனர். இந்நிகழ்ச்சியை காண லட்சம் பேரம் திரண்டிருந்தனர். எங்கும் பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே தென்பட்டது. கோவில் அருகில் உள்ள ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுகிழமையன்று காலை முதல் மாலை வரை நீராடி சாமி தரிசனம் செய்தனர்

ஆடிஅமாவாசை விழாவின் பாரம்பரியமான ராஜதர்பார் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சிங்கம்பட்டி ஜமீன்தாரர் வாரசுதாரரும், கோவிலிலன் பரம்பரை அறங்காவலருமான முருகதாஸ் தீர்த்தபதி பரிவட்டம் கட்டி குதிரையில் வலம் வந்தார். அவரை கூடியிருந்த லட்சம் பேர் வரவேற்றனர். ஆடி அமாவாசை விழாவையொட்டி பாபநாசம் தாமிரபரணியாற்றில் மறைந்த முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் திதி கொடுத்தனர். காரையாறிலும் ஏராளமானோர் திதி கொடுத்தனர்.  காரையாறில் நடந்த ஆடி ஆமாவாசை விழாவில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெங்கட்ராமன், துணை வட்டாட்சியர் பூதத்தான், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பார்கவி தங்கம், ஆழ்வார்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அருள்ராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.