மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 25 August 2017

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 48 கடலோர கிராமங்களில் ரோந்து பணி





மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாஜ் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் பலியானார்கள். 
இதை தொடர்ந்துகடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க இந்திய  கடல் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்த  நிலையில் வியாழக்கிழமையன்று  நாடுமுழுவதும் ‘சஜக்’ ஆபரேஷன் என்ற பெயரில் கடல் பகுதிகளை அதிநவீன படகுகள் மூலம் கண்காணிக்கும்  பணி நடந்தது. 

இதில் கன்னியாகுமரி கடலில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ்  இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் 3 அதி நவீன படகுகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் அடையாள அட்டைகளையும் சோதனை செய்தனர். மேலும் சந்தேகப்படும் படியாக படகுகள் கடலில் தென்பட்டால் தகவல் தெரிவிக்கும்படியும் மீனவர்களை கேட்டுக்கொண்டனர். 

சின்னமுட்டம், கூடங்குளம்,        கன்னியாகுமரி, முட்டம் ஆகிய 3 கடல்          வழித்தடங்களில்   மாலை வரை இந்த   கண்காணிப்பு    பணி   நடைபெற்றது. மேலும், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கடலோர கிராமங்களிலும் போலீசார் அதிநவீன வாகனம் மூலம் ரோந்து   பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment