மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Thursday 31 August 2017

ஆணவமில்லாத ஆலங்குளம் காவல் ஆய்வாளர்



திருநெல்வேலி மாவட்டத்திற்கு   உட்பட்ட ஆலங்குளம் காவல் நிலையம் இங்கு பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் ஐயப்பன் . இந்த காவல் நிலையத்துக்கு வரும் ஓவ்வொரு புகார் மனுக்களும் அவரே முன் நின்று விசாரணையை  செய்து பொதுமக்கள் நியாயமான விசாரணை நடத்தி பொதுமக்களை திருப்தி அடைய வைத்துள்ளார் . காவல்நிலையத்துக்கு செல்லும் பொதுமக்களிடம் சாந்தமாக பேசி பயம் இல்லாமல் காவல்துறையினர் என்றாலே ஒரு நல்ல எண்ணத்தை ஏற்படுத்திய பெருமை இந்த காவல் ஆய்வாளரையேச்   சேரும். அதைப் போன்று காவல் நிலையத்தில் உள்ள சுவர்களுக்கு வண்ணம் தீட்டி மிகவும் தூய்மையாக    வைத்துள்ளார்.

முதியவர்கள் காவல் நிலையத்துக்கு சென்றால் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து முதலில் மனுவை விசாரணை செய்து முடித்து வைத்துள்ளார். அதை போன்று சில மாதங்களுக்கு முன்பு சுரண்டையில் இருந்து வந்த ஒரு தம்பதியினர் தனது காரில்  திருநெல்வேலி செல்லும் போது அவர்களது காரை வழிமறித்து  இருவர் கத்தியை காட்டி மிரட்டி அவர்களது தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் புகார் அளிக்காமல், காவல் நிலையம் சென்றால் நம்மை மேலும் அலைக்கழிப்பார்கள் என்ற அச்சத்தில் புகார் கொடுக்க முன்வரவில்லை. பின்னர் அவர்கள் சுரண்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பின்னரும் விசாரணைக்கு அழைத்து தங்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்களோ என்ற அச்சத்தில் விட்டு விட்டனர். தற்போது சில மாதங்களுக்கு பின்னர் வழிப்பறி திருடர்கள் சிக்கி கொண்டார்கள்.

            அதன் பிறகு ஆலங்குள காவல் ஆய்வாளர் திரு.ஐயப்பன் அவர்கள் நடத்திய விசாரணையில், நகைக்கான உரிமையாளரை அடையாளம் கண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தார். காவல்துறையின் மீது இருந்த அவர்களின் பயத்தினை போக்கி அவர்களிடம் தகவல் பரிமாறிக்கொண்டனர். அவர்கள் பயத்திற்கான குழப்பத்தினை  அன்போடு விசாரித்து, நகைக்கான ஆதாரங்களை திரட்டிய பிறகு உரியவர்களிடம் நகைகளை ஒப்படைத்து விட்டார். நீதிமன்றத்தில் ஒப்படைத்து சம்பந்தப்பட்டவர்களிடம் நகையினை ஒப்படைத்து விட்டார். நகையின் உரிமையாளர் காவல்துறையின் மீது இருக்கும் நம்பிக்கை திரு.ஐயப்பன் மூலமாக வந்திருப்பதாக தெரிவித்தார். ஐயப்பன் பணி செய்யுமிடத்தில் விசாரிக்கும் போது மற்ற காவல்துறை அதிகாரிகள் அவரது துடிப்பு மற்றும் திறமைகளையும், வேலையில் அவர் காட்டும்  ஈடுபாட்டையும் வெகுவாக பாராட்டுகின்றனர். பொதுமக்களும் அவரது சிறப்பான சேவைகளை பாராட்டி வருகின்றனர். காவல் நிலையத்திற்கு வரும் எந்த ஒரு கோரிக்கை மனுவையும் காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது அந்த பகுதி மக்களுக்கு நிம்மதியாக இருக்கிறது. ஆலங்குளம் அருகில் உள்ள அனைத்தும் கிராமத்திலும் இவருடைய செயல்கள் அனைத்தையும் பாராட்டி வருகிறார்கள் . மயிலோசை இதழின் சார்பில் ஆலங்குளம் ஆய்வாளருக்கு ஒரு ராயல் சல்யூட்...

தகவல்: A.அருள் , தென்காசி.

பாவூர்சத்திரத்தில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடந்தது.





நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் வி.எம் நகரில் உள்ள ஆதிவிநாயகர் கோவிலில் 26 ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. 




பூஜையை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். 





பின்னர் 27 ம் தேதி அன்று விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து விசர்சனம் செய்தனர். 





இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 

நம்ம ஊரு நாயகன் - வெல்கம் ஹாலிடேஸ் – திரு. பஷீர்.






திருநெல்வேலி மக்களுக்கு ஆன்மீக ஸ்தலங்களுக்கு பஞ்சமில்லாத ஊர், என்று சொல்லலாம், ஆனால் அதனைத் தாண்டிய பொழுது போக்கு அம்சங்களுக்கு அவர்கள் நாடியிருப்பது மாவட்ட அறிவியல் மையம், வஉசி மைதானம் மட்டுமே. அதையும்தாண்டி செல்ல வேண்டுமானால் குற்றாலம் செல்லலாம். அதனால்,  

வெல்கம் ஹாலிடேஸ் நிறுவனம் சுற்றுலாவாசிகளின் பொக்கிஷம் என்று சொல்லலாம். சுற்றுலா செல்ல விரும்புவோர், பாதுகாப்பான பயணத்தை விரும்புவோர் இவரைத் தேடி வருகின்றார்கள். வாடிக்கையாளருக்கு தேவையானவற்றை தேவைக்கு ஏற்ற வகையில் எடுத்து கொடுப்பதில் வாடிக்கையாளர் சேவை பிரிவிலும் மிக பணிவோடு வாடிக்கையாளர்களை கவனித்து கொள்கின்றார்கள், இவரும் இவரது நிர்வாகமும்.

நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் அமைந்துள்ள வெல்கம் ஹாலிடேஸ் நிறுவனம் விமான டிக்கெட், உள்ளூர் வெளியூர் சுற்றுலா பயணம், ஆன்மீக பயணம், வாகன வசதி, ஹோட்டல் புக்கிங் என்று அனைத்து தரப்புகளும் புன்சிரிப்போடு செயல்படுத்தி வருகிறது.

விமான பயணச்சீட்டில் ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும், அதனுடைய இழப்பு என்னவோ,நிர்வாகத்திற்கு மட்டுமே அமையும். வாடிக்கையாளருக்கு அல்ல, அப்படிப்பட்ட சூழ்நிலையில், எந்தவித முக வருத்தமும் இல்லாமல் சந்தோசமாய் புன்சிரிப்போடு, இயல்பாக பேசி, வாடிக்கையாளர்களை அமைதிப்படுத்தி அவர்களுக்குரிய பயணத்தை இனிதாய் அமைத்து கொடுப்பதற்கு மிக அதிக பொறுமையும், நிதானமும் தேவை. அந்த சேவையை செவ்வனே செய்து வரும் வெல்கம் ஹாலிடேஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நம்ம ஊரு நாயகன் பஷீர் அஹமது அவர்களை இன்று நாம் சந்தித்து மயிலோசை இதழுக்காக உரையாடினோம்.

"நம்ம ஊரு நாயகன்" என்ற தலைப்பில் இனி அவருடன் நடந்த உரையாடலை காணலாம்.

உங்களை பற்றிய அறிமுகம்....

வணக்கம். என் பெயர் பஷீர். நான் திருநெல்வேலியில் மேலப்பாளையத்தில் பிறந்தேன். சொர்ணா இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தேன். அதன் பிறகு விரும்பி தேர்ந்தெடுத்தது. ஐடிஐ டீசல் மெக்கானில் பிரிவை தேர்ந்தெடுத்து படித்தேன். அப்பா லேபராக பணியாற்றினார். நான் 1982 இல் பிறந்தேன். திருமணத்திற்கு முன்னரே நான் வெளிநாடு சென்று விட்டேன். 2006 இல் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு அவர் வெளிநாடு சென்று இருபது வருடங்கள் பணியாற்றினார். அப்பா வெளிநாட்டில் இருந்து வந்ததும் ஹார்ட்வர் கடை வைத்திருந்தார். அந்த கடையில் நானும் பணியாற்றினேன். அதன் பிறகு இதே டூரிஸ்ட் பணிகளில் எனது தாய்மாமா தான் எனக்கு குருநாதர் என்று சொல்லலாம். தாய்லாந்தில் அவர் தமிழ்ச்சங்கத்தில் அவர் இமாமாக இருந்தார். அவருடைய உறுதுணையில் நான் இந்த துறையில் என்னை ஈடுபடுத்த தொடங்கினேன். அவருடைய உதவியாளராக அவரோடு களமிறங்கினேன். 2001 முதல் 2006 வரை தாய்லாந்தில் தாய்மாமாவுடன் பணியாற்றினேன். 2007இல் அப்பா தவறி விட்டார். குடும்பச்சூழ்நிலை காரணமாக மீண்டும் இந்தியா வர வேண்டிய சூழ்நிலை உருவானது.  அப்பாவின் தொழிலை நம்மால் ஈடு கொடுத்து பார்க்க முடியாத சூழல் உருவானதாலும், தன்னுடைய அனுபவம் சுற்றுலாத்துறையில் இருந்ததாலும் தான் 2007 மே மாதம் வெல்கம் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் தொடங்கினேன். இன்று அது வளர்ந்து மூன்று கிளைகளாக உருவாகியுள்ளது.

ஐடிஐ டீசல் மெக்கானிக் படித்த நீங்கள் இந்த துறையை தேர்ந்தெடுத்தது எப்படி?

ஆனால் டீசல் மெக்கானிக்காக பணியாற்றிய எனக்கு அந்த டீசல் மற்றும் கெமிக்கல் உடல் மற்றும் தோல் அலர்ஜியாகவும் மருத்துவரின் அறிவுறுத்தல் படி அந்த வேலையை விடவும் ஒரு காரணம்.

வியாபாரத்தில் உங்களுக்கு இருக்கும் போட்டிகளை எப்படி எதிர்கொள்கின்கிறீர்கள்?

இப்போதுள்ள சூழ்நிலையில் எந்த துறையில்தான் போட்டிகள் இல்லை, நாம் நியாயமாக உழைத்தால் நமக்கு வரவேண்டிய வாடிக்கையாளர்கள் தானாகவே தேடி வருவார்கள். யாருக்கும் நாம் நம்பிக்கை மோசடி செய்யவில்லை, வாடிக்கையாளர் செல்ல வேண்டிய இடத்தை சொன்னால் அந்த இடத்திற்கு நாம் டிக்கெட்டுகள் பதிவு செய்து கொடுக்கின்றோம். மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று நான் சிந்திப்பதில்லை, நான் என் நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளரை எப்படி திருப்தி படுத்துவது என்பது மட்டுமே சிந்திக்கின்றேன். போட்டிகளை பற்றி நான் கவலைப்பட்டதும் இல்லை.

தற்பொழுது உருவாகியுள்ள ஆன்லைன் சேவை உங்கள் வர்த்தகத்தை பாதிக்கின்றதா?

நிச்சயமாக இல்லை. ஆன்லைன் சேவையில் இருக்கும் பிரச்சினைகள் பெரும்பாலான மக்களுக்கு புரிவதில்லை. காரணம், ஆன்லைன் சேவையில் டிக்கெட்டுகள் பதிவு செய்துவிடுவார்கள், நினைத்ததை நினைத்த நேரத்தில் பதிவு செய்யலாம். ஆனால், ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் அவர்கள் தேதி மாற்ற வேண்டும் என்றோ அல்லது கேன்சல் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் அவர்கள் அதனை தேடி அலைந்தாலும் அதற்குரிய பதில் கிடைக்காது அல்லது மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். அந்த பிரச்சினைகள் எங்களை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருக்காது. பதிவு செய்யவோ அல்லது கேன்சல் செய்யவோ எங்களிடம் தாராளமாக செய்யலாமே. மனஉளைச்சலையும் தவிர்க்கலாமே!

டூர்ஸ் பேக்கேஜ் தவிர வேறு என்ன பணிகள் உள்ளன?

ஏர் டிக்கெட்தான் பிரதானம், இது தவிர பாஸ்போர்ட், ரயில் டிக்கெட், உள்ளூர் வெளியூர் வாடகை வாகனங்கள், ஹோட்டல் புக்கிங் உள்ளிட்டவையும் செய்து தருகின்றேன். பாஸ்போர்ட் செர்வீஸ் மட்டும் இதுவரை 6000 நபர்களுக்கு பெற்று கொடுத்திருக்கின்றேன்.

மற்ற டிராவல்ஸை காட்டிலும் உங்களின் சேவைக்கட்டணம் அதிகமாக உள்ளது போன்று உள்ளதே?

நான் ஏற்கனவே சொன்னது போல மற்ற நிறுவனங்களை நான் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. என்னுடைய சேவையில் நான் சரியாக இருக்கின்றேன். எனது சேவைக்கேற்ற கட்டணத்தை நான் பெற்றுக்கொள்கின்றேன். எத்தனையோ முறை எங்களுக்கு இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் அதனை பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தோளில் அழுத்த மாட்டேன். சேவைக்கட்டணம் அதிகம் என்று வெளியில் சென்ற பலர் திரும்பி என்னிடம் வந்து என்னுடைய சேவையில் திருப்தி பெற்று பலரை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். இதுவே எனது வெற்றிக்கு அறிகுறி. நான் சரியான கட்டணத்தைத்தான் நிர்ணயித்திருக்கின்றேன் என்று சொல்லலாம்.

உங்கள் நிறுவனத்தின் கிளைகள் வேறு எங்கும் உள்ளதா?

வண்ணாரப்பேட்டை புறவழிச்சாலை, மேலப்பாளையம், மற்றும்  தூத்துக்குடி ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளது.  

உங்களின் எதிர்காலத்திட்டம் என்ன?

எனக்கு ஒரு ஆசை என்னவெனில், குறைந்த கட்டணத்தில் அனைவரையும் விமான பயணத்தை அனுபவிக்க வேண்டும், அவர்கள் அனைவருமே அவர்கள் வாழ்நாளில் விமான பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான சேவையில் எந்த விமான சேவை முன்வந்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களை பிரயாணம் செய்ய வைக்க வேண்டும் என்பதே. அது தவிர, இன்னும் பல குடும்பங்களுக்கு எனது நிறுவனம் உதவிகள் செய்ய வேண்டும், அதற்கு எனது வர்த்தகம் விரிவடைய வேண்டும், அதில் பல ஊழியர்களை நியமிக்க வேண்டும்,

எங்களது மயிலோசை இதழ் பற்றி?

நிறைய நாளிதழ்கள் படித்திருக்கிறேன். ஆனால் இது உண்மையிலேயே ஒரு வித்யாசமான முயற்சிதான் என்று நினைக்கின்றேன். மிக அற்புதமான தகவல்கள், வித்யாசமான பேட்டிகள், பல்வேறு செய்திகளின் தொகுப்புகள் என்று பல விஷயங்களை நேரில் சென்று களமிறங்கி சேவை செயகிண்றீர்கள். இதன் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு எனது நன்றி மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்து கொள்கின்றேன்.












சன் டிவி காமெடி ஜங்சன் நடிகர் நெறியாளர் சம்சுதீன் அவர்களுக்கு சொல்மணி செல்வர் விருது!



மதுராந்தகம் மேலக்கான்டேல் மகாகவி பாரதி நற்பணி மன்றத்தின் சார்பாக சுதந்திர தின விழா அன்று மேல்மருத்துவர் அச்சரப்பாக்கத்தில் வைத்து நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறந்த தமிழ் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பெரும் தமிழ் கலைஞர்கள் விருது பெற்றனர். 

இதில் சன் டிவி காமெடி ஜங்ஷன் நடிகர் நெறியாளர் திரு. முகம்மது சம்சுதீன் அவர்களுக்கு சிறந்த பேச்சாளர் விருதான “ சொல்மணி செல்வர் “ என்ற விருதினை மதுராந்தகம் மகாகவி பாரதி நற்பணி மன்றம் வழங்கியது. எழுத்து மற்றும் பேச்சு வழியாக தொலைக்காட்சிகளில் பொது இடங்களிலும் தன் தமிழ் உணர்வால் விழிப்புணர்வு எற்படுத்தியமைக்கும் சிறந்த தமிழ் சொல் புலமைக்கும் அவருக்கு இந்த விருது கிடைத்தது.


இது குறித்து சம்சுதீன் பேசுகையில்... இளம் தமிழ் ஆர்வலர்களை ஊக்குவிக்கும் விதமாக இது போன்ற விருதுகள் எங்கள் தமிழ் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. மகாகவி பாரதி நற்பணி மன்றத்தின் சார்பாக கிட்டத்தட்ட 15௦௦ க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விருது வழங்கியுள்ளனர். அதன் வரிசையில் நானும் இடம் பெற்றது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார். மேலும் மற்ற தினங்களில் எங்களுக்கு கிடைத்த விருதுகளை விட சுதந்திர தினவிழாவில் கிடைத்த இந்த விருதே எங்களை பெருமையடைய செய்தது. 

இது போன்ற தமிழ் தொண்டுகள் அனைவரிடமும் வர வேண்டும். இதற்கு மகாகவி பாரதி நற்பணி மன்றம் சிறந்த சான்றாக அமைந்துள்ளது என்றும் நெறியாளர் சம்சுதீன் தெரிவித்தார். இவர் தற்போது பாளை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.




பாளை வடபகுதி பாதாள மாடன் கோவில் தெருவில் 117 வருடங்களாக அமர்ந்து அருள் பாலித்துவரும் ஸ்ரீ சித்தி விநாயக பெருமான் கோபுர கலசத்திற்கும், மூலஸ்தானத்திற்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.

கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு காலை 11 மணிக்கு சிறப்பு மஹா அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம் நடந்தது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனையும் அதனை தொடர்ந்து இரவு எட்டு மணிக்கு உற்சவ விநாயக பெருமான் வீதி உலா வருதல் நடந்தது. 


கும்பாபிஷேக யாக வேள்வி பூஜையை தச்சநல்லூர் ஸர்வசாதகம் சிவஸ்ரீ வெங்கடாஜலபட்டர் (எ) கண்ணன் பட்டர் நடத்தி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை இறைபணி பெரியோர்கள், நண்பர்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Wednesday 30 August 2017

மேலப்பாளையத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாமை ஆட்சியர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார்.




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மேலப்பாளையத்தில்  டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் சுபைர் அகமது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் யூசுப் அலி முன்னிலை வகித்தார். 

ஆட்சியர்  சந்தீப்நந்தூரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி முகாமை தொடங்கிவைத்து பேசினார். அவர் பேசுகையில்... நெல்லை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் குறைந்துவிட்டது. சுகாதாரத்துறையினர் காய்ச்சல் உள்ள இடங்களுக்கு சென்று அது பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருந்தாலும் பொதுமக்கள் சுகாதாரத்துடனும், காய்ச்சி குடிநீரை குடிக்கவேண்டும். காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும். டெங்கு, டைபாய்டு, மர்ம காய்ச்சல் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றார். 

முகாமில் தாசில்தார் தங்கராஜ், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் மகாகிருஷ்ணன், தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர்கள் சுலைமான், செய்யது அலி, மாவட்ட பொருளாளர் முகமது மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாளையில் கால்டுவெல் நினைவுதின கருத்தரங்ம்.



தொன்மையான தமிழ் மொழி பற்றி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பாளையில் நடந்த கால்டுவெல் நினைவுதின கருத்தரங்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் கூறினார். 

கருத்தரங்கை பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்... “தமிழ் அறிஞர் கால்டுவெல்லின் பெருமைகளை பற்றி இங்கு பேசினார்கள். பள்ளிக்கூடங்களில் குழந்தைளை ஆங்கில மொழியில் பேச சொல்லி கட்டாயப் படுத்துகிறார்கள்.  தமிழ் மொழியை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். நமது மொழியின் பெருமைகளை பிற மொழிகளில் எழுத வேண்டும். வேலைவாய்ப்புக்காக ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் தொன்மையான தமிழ் மொழியை பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்என்றார்.

 மேடையில் கால்டுவெல்லின் மார்பளவு சிலையை விஜிலா சத்யானந்த் எம்.பி. வழங்க, அதை தொல்லியல் துறை ஆணையாளர் அறவாழி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கால்டுவெல் வாழ்வும், பணியும்என்ற நூலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி.பிரிட்டோ வெளியிட, அதை எட்வின் சாமுவேல், அறம்வளர்த்தநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மொழி வளர்ப்பில் கால்டுவெல் பங்களிப்புஎன்ற தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவும், ‘சமூகநீதியும், கால்டுவெல்லும்என்ற தலைப்பில் சாராள் தக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியை தங்கமும், ‘கால்டுவெல்லின் சமயப்பணிஎன்ற தலைப்பில் ஜான்ஸ் கல்லூரி முதல்வர் ஜான்கென்னடியும் பேசினார்கள்.

கருத்தரங்கில் பாலபிரஜாபதி அடிகளார், பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ், திருமண்டல நிர்வாகிகள் பில்லி, ஸ்டீபன் செல்வின்ராஜ், கருத்துவ காரியதரிசி தேவராஜ் ஞானராஜ் உள்பட பலர் கொண்டனர். முடிவில் அப்பாஸ் நன்றி கூறினார். கருத்தரங்கில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை திருமண்டலம் ஆகியவை இணைந்து செய்து இருந்தன.

குடிநீர் கேட்டு பெண்கள் நூதன போராட்டம்.




தென்காசி அருகே குடிநீர் வழங்க கோரி, பெண்கள் செவ்வாய்கிழமையன்று நூதன போராட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் கிராமத்தில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் குடிநீர் சீராக கிடைப்பதில்லை. மேலும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பல வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகளில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.

 எனவே, பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்க வேண்டும் எனக் கோரி சுந்தரபாண்டியபுரம் நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பெண்கள் செவ்வாய்கிழமையன்று காலிக் குடங்களுடன் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, குடங்களை தரையில் நடுவில் வைத்து அதனை சுற்றி ஒப்பாரி வைத்து கோஷமிட்டனர். 

நெல்லை, தூத்துகுடி மண்டல கனரா வங்கிகளில் ரூ.65கோடி கடனுதவி.




நெல்லை தூத்துகுடி மண்டல கனரா வங்கிகளில் 750 வாடிக்கையாளர்களுக்கு ரூ.65கோடி கடனுதவி வழங்கப்பட்டது. நெல்லை தூத்துகுடி மண்டலங்களை உள்ளடக்கிய கனரா வங்கிகள் சார்பில் வீட்டு வசதி கடன், அடமானக்கடன், தொழிற்கடன், விவசாயக்கடன், தனிநபர்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 100 கனரா வங்கி கிளைகளில் நடந்தது. பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. மதுரை வட்டார கனரா வங்கி துணை பொது மேலாளர் சண்முகம் முகாமை துவக்கி வைத்தார். நெல்லை மண்டல மேலாளர் செல்வராஜன், தூத்துகுடி உதவி பொது மேலாளர் மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

 பாளையில் நடந்த விழாவில் 40 பயனாளிகளுக்கு ரூ16 கோடி கடனுதவிகளை துணை பொது மேலாளர் சண்முகம் வழங்கினார். இதில் கோட்ட மேலாளர்கள் வெங்கட் இளங்கோ, செல்வின் ஞானதாஸ், முகம்மது இஸ்மாயில், வைகுண்டம், முதுநிலை மேலாளர்கள் பாலசுப்பிரமணியம், முருகையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை, தூத்துகுடி மண்டலத்திலுள்ள 100 கனரா வங்கி கிளைகள் சார்பாக 750 பயணாளிகளுக்கு ரூ65 கோடி கடனுதவி அளிக்கப்பட்டதற்க்கான ஒப்புதல் கடிதம் இம்முகாமில் வழங்கப்பட்டதாக கனரா வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் அக்டோபர் 31ம்தேதி வரை கடனுதவி வழங்கும் முகாமில் எவ்வித பரிசீலினை கட்டணமும் இல்லாமல் கடனுதவிகளை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

நாட்டு மரங்களை நடவு செய்ய விழிப்புணர்வு ரோட்டரி யாத்திரை குழுவினருக்கு நெல்லையில் வரவேற்பு.




சென்னை ஸ்பாட் லைட் ரோட்டரி சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 15 நகரங்களில் பசுமை தாயகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 8நாள் மோட்டார் வாகன நகர்வலம் நடத்தி வருகிறது. இக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்து நாட்டுமரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியத்தையும் அதன் சிறப்புகளையும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளக்கியும், அதை நடவு செய்து வருகின்றனர்.

விழிப்புணர்வு வாகனத்தில் மகளிர் குழுவை சார்ந்த ரோட்டரி சங்க தலைவி சாரதாசுந்தரம், பசுமை தாயக திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபாலா ராஜேந்திரன், யாத்திரை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயலதாமார்டின் மற்றும் சுசித்ரா ஆகியோர் நெல்லை வந்தனர். பாளை முருகன்குறிச்சியில் முன்னாள் ரோட்டரி கவர்னர் ஆறுமுகப்பாண்டியன் தலைமையில் ரோட்டரி உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நெல்லை மாவட்ட ரோட்டரி சங்க பிரதிநிதிகள் உறுப்பினர்களுடன் மகளிர் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து பாளை ஐகிரவுன்டு காந்திமதி மேல்நிலைப்பள்ளியில் புங்கன் நாவல் உள்ளிட்ட 200 நாட்டுமரங்களுடன் நடவு செய்யும் பணி நடந்தது. மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி பராமரிக்க மரக்கன்றுக்கு மாணவிகள் வீதம் நியமிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் ரோட்டரி கவர்னர் சீனிவாசன், ரோட்டரி மகளிரணி ஜெசிந்தா தர்மா, முன்னாள் கவர்னர் ராஜேந்திரன், ரோட்டேரியன் சரவணன், செய்யதுஅலி, ஸ்டார் ரோட்டரி முன்னாள் தலைவர் மாரியப்பன், ராஜ்பால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குளத்தில் பசுமை இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.



நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் பசுமை இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.


நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகரில்  பசுமை இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளது. 

இதனை தடுக்கும் விதமாக ஆலங்குளம் பசுமை இயக்கம் சார்பில் ராமசாமி, சுயம்பு, விஜயராஜ, தங்கம், இளங்கோ மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாபு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் 4ம் கட்டமாக வழங்கினார்கள். 

நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு



பக்ரீத் பண்டிகையின் போது அறுக்கப்படும் ஆடு மாடுகள்  கழிவுகளை அகற்ற தேவையாக உபகரணங்கள் தேவை மாநகராட்சி ஆணையரிடம் மனு.


பக்ரீத் பண்டிகை முன்னிட்டு அறுக்கப்படும் ஆடு மாடுகள்  கழிவுகளை சேமித்து மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்க தேவையாக உபகரணங்களை நெல்லை டவுண் பேட்டை பாளையங்கோட்டை பகுதி இஸ்லாமியர்களுக்கு வழங்க கோரி நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச்சங்கம் சார்பில் தலைவர் முகம்மது அய்யூப், செயலாளர் ஜமால் முகம்மது ஹீஸைன், பொருளாளர் முகம்மது கஸ்ஸாலி மற்றும் நிவாக குழு உறுப்பினர்கள் செய்யது முகம்மது சேட், மஹபூப்பாட்ஷா, கல்லணை சுல்தான், அப்துல்லாஹ், நியாஸ் உட்பட நிர்வாகிகள் நெல்லை மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தனர். 

புதிய சரக்கு சேவை வரி விதிப்பு முறைக்கு நெல்லை நகர பொற்கொல்லர் சங்கம் ஆதரவு.


  



நெல்லையில் நடைபெற்ற நெல்லை நகர பொற்கொல்லர் சங்க 53வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் புதிய சரக்கு சேவை வரி விதிப்பு முறைக்கு நெல்லை நகர பொற்கொல்லர் சங்கம் ஆதரவு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  53வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நெல்லை டவுண் தங்கமஹாலில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில்  தலைவர் ஆறுமுகநயினார், செயலாளர் நெல்லைக்குமார், பொருளாளர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் அசோக்குமார், துணைச்செயலாளர் முத்துகுமார், உதவி தலைவர்கள் முருகன், பட்டுவேல்முருகன், உதவி செயலாளர்கள் முருகேசன், அசோக்குமார் மற்றும் திரளான  சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நெல்லை நகர பொற்கொல்லர் சங்க உதவி செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.