மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 25 August 2017

மரத்தில் ஆட்டோ மோதியதில் விவசாயி சாவு - குழந்தை உள்பட 10 பேர் படுகாயம்


கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி, திரிகூடாபுரம், குமந்தாபுரம், முத்துசாமியாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் கடையநல்லூர் தாலுகா அலுவலகம்,மருத்துவமனை, மார்க்கெட் ஆகிய பகுதிகளுக்கு அப்பகுதி மக்கள் ஆட்டோவில் செல்வது வழக்கம். 

அதேபோல் வியாழக்கிழமையன்று  ஒரு ஆட்டோவில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சென்று  கொண்டிருந்தனர். ஆட்டோவை   சொக்கம்பட்டியை   சேர்ந்த சிவா (வயது 24) என்பவர் ஓட்டினார். கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் பெட்ரோல் பங்க்வளைவில் சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது.

 இதில்ஆட்டோவில் இருந்த சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணிய பாரதியார் (65), பூங்கொடி (28), தினேஷ் (1), முத்துப்பாண்டியன் (51), குமந்தாபுரத்தை சார்ந்தவிமலாதேவி (19), சுகன்யா (28), வள்ளியம்மாள் (60), வேலம்மாள் (60), முத்துசாமியாபுரத்தை சேர்ந்த சண்முகத்தாய் (45), சுவேதா (26), கடையநல்லூரை சேர்ந்த கார்த்திக் (28)ஆகிய 11 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரையும் மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


 பாலசுப்பிரமணிய பாரதியார் மேல் சிகிச்சைக்காகபாளை  ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 10 பேருக்கும் கடையநல்லூர் அரசுஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment