கிராம தபால் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமானபரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி அனைத்திந்திய கிராம தபால் ஊழியர் சங்க குமரி கோட்டம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் கடந்த 16ந் தேதி முதல் நடந்து வருகிறது.
இந்த போராட்டம்செவ்வாய்கிழமையன்று 7வது நாளாக தொடர்ந்தது. இதையொட்டி நாகர்கோவில் தலைமை தபால்நிலைய அலுவலக வளாகத்தில் கிராமிய தபால் ஊழியர்கள் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தினர்.போராட்டத்துக்கு சங்க தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான ஊழியர்கள்கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment