நெல்லை ஜங்சனின் அவலம் - மாநகராட்சி மாற்றுமா?
கொசுக்களைக் கொடுக்குமா?
நெல்லை மாநகரத்தை சொர்க்கமாக மாற்றுவோம்,
அல்ட்ரா சிட்டியாக்கி நெல்லையை ஆட்டிப்
படைப்போம் என்று ஆர்ப்பரிக்கும் திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகள், நெல்லை ஜங்சனில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் போது இடதுபக்கம் உள்ள முனையில் ஆட்டோ நிறுத்தம் பின்பு சாக்கடை
தேங்கி சுகாதாரக் கேடாக உள்ளது.
அவ்வழியில் வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கிறது.
அதேபோல் நடந்து செல்பவர்களின் எண்ணிக்கை
அதிகமாக உள்ளது. சாக்கடை தேங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம்
உள்ளது.
நெல்லை மாநகராட்சி
அதிகாரிகள் இதை மாற்றுவார்களா? அல்லது டெங்கு போன்ற கொசுக்களை
மக்களுக்கு கொடுத்து அங்கும் இங்கும் பரப்புவார்களா? பாரில்!

No comments:
Post a Comment