மதுராந்தகம்
மேலக்கான்டேல் மகாகவி பாரதி நற்பணி மன்றத்தின் சார்பாக சுதந்திர தின விழா அன்று
மேல்மருத்துவர் அச்சரப்பாக்கத்தில் வைத்து நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறந்த
தமிழ் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில்
இருந்து பெரும் தமிழ் கலைஞர்கள் விருது பெற்றனர்.
இதில் சன் டிவி காமெடி ஜங்ஷன்
நடிகர் நெறியாளர் திரு. முகம்மது சம்சுதீன் அவர்களுக்கு சிறந்த பேச்சாளர் விருதான “
சொல்மணி செல்வர் “ என்ற விருதினை மதுராந்தகம் மகாகவி பாரதி நற்பணி மன்றம்
வழங்கியது. எழுத்து மற்றும் பேச்சு வழியாக தொலைக்காட்சிகளில் பொது இடங்களிலும் தன்
தமிழ் உணர்வால் விழிப்புணர்வு எற்படுத்தியமைக்கும் சிறந்த தமிழ் சொல் புலமைக்கும்
அவருக்கு இந்த விருது கிடைத்தது.
இது குறித்து
சம்சுதீன் பேசுகையில்... இளம் தமிழ் ஆர்வலர்களை ஊக்குவிக்கும் விதமாக இது போன்ற
விருதுகள் எங்கள் தமிழ் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. மகாகவி பாரதி நற்பணி
மன்றத்தின் சார்பாக கிட்டத்தட்ட 15௦௦ க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விருது
வழங்கியுள்ளனர். அதன் வரிசையில் நானும் இடம் பெற்றது எனக்கு மிகவும் பெருமையாக
இருக்கிறது என்றார். மேலும் மற்ற தினங்களில் எங்களுக்கு கிடைத்த விருதுகளை விட சுதந்திர
தினவிழாவில் கிடைத்த இந்த விருதே எங்களை பெருமையடைய செய்தது.
இது போன்ற தமிழ்
தொண்டுகள் அனைவரிடமும் வர வேண்டும். இதற்கு மகாகவி பாரதி நற்பணி மன்றம் சிறந்த
சான்றாக அமைந்துள்ளது என்றும் நெறியாளர் சம்சுதீன் தெரிவித்தார். இவர் தற்போது
பாளை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment