மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday, 30 August 2017

பாளையில் ரெயில் வரும் நேரத்தில் கேட் உடைந்ததால் பரபரப்பு.



பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் மத்திய சிறைசாலை அருகில் உள்ள ரெயில்வே கேட்டைகடந்து நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் செல்லும்இந்தவழியாக 10 முறைக்கும் மேல் ரெயில்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த ரெயில்கள் வந்து செல்லும் நேரத்தில் இந்த சாலையில் ரெயில்வே கேட் மூடி திறக்கப்படும்போது  போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். 

மேலும் இந்த வழியாக தான்   புதிய பஸ்நிலையத்திற்கும், நாகர்கோவிலுக்கும்   செல்கின்ற வாகனங்கள் செல்லும். இதனால் இங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்க உத்தரவிட்டு நிதிஒதுக்கப்பட்டும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமையன்று காலையில் நெல்லை  சந்திப்பில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரெயில் வருவதற்காக ரெயில்வே கேட்மூடப்பட்டது. அப்போது ஒருபுறம் இருந்த கேட் திடீரென உடைந்து விழுந்து பழுதடைந்தது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே ரெயில்வே ஊழியர்கள் அங்கு   இருந்த இரும்பு சங்கிலியால் கேட்பகுதியில் கட்டினார். அதற்குள் ரெயில் வந்துவிட்டது. ரெயில் சென்றதைதொடர்ந்து மற்றொரு புறம்உள்ள கேட்டை திறக்க கேட் கீப்பர் முயற்சி செய்தார்.  ஆனால் திறக்க முடியவில்லை. இதனால்இருபுறங்களிலும் ஏராளமான வாகனங்கள்   அணிவகுத்து நின்றன. 

தூத்துக்குடி, திருச்செந்தூரில்இருந்து வந்த பஸ்கள், புதிய பஸ்நிலையத்திற்கு செல்லமுடியாதநிலை ஏற்பட்டது. ஒரு மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு தகவல்தெரிக்கவிக்கப்பட்டது. தொழில் நுட்ப பணியாளர்கள் விரைந்து வந்து கேட்டை கழற்றி பழுதுபார்த்தனர். இதன் பிறகு போக்குவரத்து சரியானது. 


No comments:

Post a Comment