மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday, 30 August 2017

நாட்டு மரங்களை நடவு செய்ய விழிப்புணர்வு ரோட்டரி யாத்திரை குழுவினருக்கு நெல்லையில் வரவேற்பு.




சென்னை ஸ்பாட் லைட் ரோட்டரி சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 15 நகரங்களில் பசுமை தாயகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 8நாள் மோட்டார் வாகன நகர்வலம் நடத்தி வருகிறது. இக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்து நாட்டுமரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியத்தையும் அதன் சிறப்புகளையும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளக்கியும், அதை நடவு செய்து வருகின்றனர்.

விழிப்புணர்வு வாகனத்தில் மகளிர் குழுவை சார்ந்த ரோட்டரி சங்க தலைவி சாரதாசுந்தரம், பசுமை தாயக திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபாலா ராஜேந்திரன், யாத்திரை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயலதாமார்டின் மற்றும் சுசித்ரா ஆகியோர் நெல்லை வந்தனர். பாளை முருகன்குறிச்சியில் முன்னாள் ரோட்டரி கவர்னர் ஆறுமுகப்பாண்டியன் தலைமையில் ரோட்டரி உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நெல்லை மாவட்ட ரோட்டரி சங்க பிரதிநிதிகள் உறுப்பினர்களுடன் மகளிர் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து பாளை ஐகிரவுன்டு காந்திமதி மேல்நிலைப்பள்ளியில் புங்கன் நாவல் உள்ளிட்ட 200 நாட்டுமரங்களுடன் நடவு செய்யும் பணி நடந்தது. மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி பராமரிக்க 1 மரக்கன்றுக்கு 2 மாணவிகள் வீதம் நியமிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் ரோட்டரி கவர்னர் சீனிவாசன், ரோட்டரி மகளிரணி ஜெசிந்தா தர்மா, முன்னாள் கவர்னர் ராஜேந்திரன், ரோட்டேரியன் சரவணன், செய்யதுஅலி, ஸ்டார் ரோட்டரி முன்னாள் தலைவர் மாரியப்பன், ராஜ்பால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment