திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருணா மகாலில் திருநெல்வேலி மாவட்ட
கூட்டுறவு வங்கி மற்றும் கலைமகள் தொண்டு நிறுவனத்தின் சார்பில்
சுயஉதவிக்குழுவினர்க்கு கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில்
(11.08.2017)
நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் 27 மகளிர் சுய உதவிக் குழக்களை சேர்நத 356 நபர்களுக்கு 1.30 கோடி மதிப்பிலாக கடனுதவிகளை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்ட மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திடும் வகையில் திறந்தவெளி
கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில்
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தனி நபர் கழிப்பிடங்கள் இல்லாத அனைத்து இல்லங்களிலும்
கழிப்பிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. திருநெல்வேலி சுகாதார லீக்
திட்டம் மூலம் ஊராட்சிகளுக்கு “அண்ணாச்சி யூஸ் தி டாய்லட்” கட்டி முடிங்க ஜெயித்து காட்டுங்க போட்டிகள்
நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து இல்லங்களிலும் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டி
முடிக்கப்பட்டு, திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத ஊராட்சியாகவும், குப்பைகள் தரம்பிரித்து சுகாதாரமான ஊராட்சியாகவும் தேர்வு செய்யப்டும்
ஊராட்சிகள் வளர்ச்சிக்கு ரூ.20 இலட்சம் வரை பரிசு தொகை
வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நமது மாவட்டம் 31.10.2017 க்குள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.
இன்று களக்காடு பகுதியில் கலைமகள் அறக்கட்டளையில் உள்ள 27 சுய உதவி குழுக்களை சேர்ந்த 356 உறுப்பினர்களுக்கு
ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை மொத்தம் ரூ.1.30 கோடி மதிப்பில் தேவைக்கேற்ப கடன் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி தொழில்
தொடங்கி வாழ்க்கை தரத்தை உயர்த்திட வேண்டும். அனைத்து இல்லங்களிலும் தனி நபர் இல்ல
கழிப்பறை அமைக்க ஒத்துழைக்க வேண்டும் என பேசினார்.
இவ்விழாவில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் தனி நபர் இல்ல
கழிப்பிடங்கள் அமைக்க நன்கொடையாக ரூ.3 இலட்சத்திற்கான
காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினார்.
முன்னதாக களக்காடு ஒன்றியம் மீனவன்குளம் கிராமத்தில் திறந்த வெளியில் மலம்
கழிப்பதிலிருந்து விடுதலை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
தொடங்கி வைத்தார். மேலும் கலைமகள் தொண்டு நிறுவனத்தின் மூலம் தயார் செய்து தனி
நபர் கழிப்பிடம் அமைக்க நன்கொடையாக வழங்கப்பட்ட சிமின்ட் உறைகளையும் மாவட்ட
ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.
இவ்விழாவில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் எச். வசந்த குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர். குருமூர்;த்தி, கலைமகள் தொண்டு நிறுவனர் அருட்தந்தை டென்சில்ராஜா, யுனிசெட் பிரதிநிதி அப்சா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிளரான்ஸ் விமலா, சுந்தரராஐன் மற்றும் அலுவலர்கள் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினாகள்; கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment