தச்சை வேதிக் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி வருகையை முன்னிட்டு பள்ளி மழலையர்கள் கிருஷ்ணர்-ராதை வேடம் அணிந்துகொண்டு நெல்லையை அடுத்து எட்டெழுத்துப் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்கள். அங்கு பெருமாளின் 10 அவதாரங்கள் போன்று மழலையர்கள் வேடமணிந்த கலந்துகொண்டு அவருடைய சிறப்புகளை எடுத்துரைத்தார்கள்.
கோபியர்கள் குடைசூழ கிருஷ்ணர்கள் கோ-சாலையில் உள்ள கோமாதாக்களுடன் விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் கடவுள் பெருமாள் பற்றிய பஜனைகளையும், கோஷங்களையும் கூறி மகிழந்தனர். அங்குள்ள கோவில் குருக்கள் மழலையர்களுக்கு எட்டெழுத்துப் பெருமாள் கோவில் பற்றிய வரலாற்றையும் வழிபாட்டால் உருவாகும் நன்மைகளையும் எடுத்துரைத்தார். பின்னர் கோவில் சார்பில் குழந்தைகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ், இயக்குநர் திலகவதி, முதல்வர் சோமசுந்தரி, மேலாளர் செல்வராஜ், மற்றும் ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி மற்றும் மாணவ மாணவியர்கள், ஆசிரிய ஆசிரியைகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


No comments:
Post a Comment