தொன்மையான தமிழ் மொழி பற்றி ஆய்வு
மேற்கொள்ள வேண்டும் என்று பாளையில் நடந்த கால்டுவெல் நினைவுதின
கருத்தரங்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் கூறினார்.
கருத்தரங்கை பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர்
பேசுகையில்... “தமிழ் அறிஞர் கால்டுவெல்லின் பெருமைகளை பற்றி இங்கு பேசினார்கள்.
பள்ளிக்கூடங்களில் குழந்தைளை ஆங்கில மொழியில் பேச சொல்லி
கட்டாயப் படுத்துகிறார்கள். தமிழ் மொழியை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
நமது மொழியின் பெருமைகளை பிற மொழிகளில் எழுத வேண்டும். வேலைவாய்ப்புக்காக ஆங்கில
மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் தொன்மையான தமிழ் மொழியை பற்றி
ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்“
என்றார்.
மேடையில் கால்டுவெல்லின்
மார்பளவு சிலையை விஜிலா சத்யானந்த் எம்.பி. வழங்க, அதை தொல்லியல் துறை ஆணையாளர் அறவாழி
பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ‘கால்டுவெல் வாழ்வும், பணியும்‘ என்ற நூலை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி.பிரிட்டோ வெளியிட, அதை எட்வின்
சாமுவேல், அறம்வளர்த்தநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
‘மொழி வளர்ப்பில்
கால்டுவெல் பங்களிப்பு‘ என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவும், ‘சமூகநீதியும், கால்டுவெல்லும்‘ என்ற தலைப்பில்
சாராள் தக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியை தங்கமும், ‘கால்டுவெல்லின்
சமயப்பணி‘ என்ற தலைப்பில் ஜான்ஸ் கல்லூரி முதல்வர் ஜான்கென்னடியும்
பேசினார்கள்.
கருத்தரங்கில் பாலபிரஜாபதி அடிகளார், பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட
முதன்மை குரு சேவியர் டெரன்ஸ்,
திருமண்டல நிர்வாகிகள் பில்லி, ஸ்டீபன்
செல்வின்ராஜ், கருத்துவ காரியதரிசி தேவராஜ் ஞானராஜ் உள்பட பலர் கொண்டனர்.
முடிவில் அப்பாஸ் நன்றி கூறினார். கருத்தரங்கில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை திருமண்டலம்
ஆகியவை இணைந்து செய்து இருந்தன.

No comments:
Post a Comment