பாளையங்கோட்டை
சாந்திநகர் காவலர் குடியிருப்பு அருகில் உள்ள மணி மஹால் திருமண மண்டபத்தில் வைத்து
சாந்திநகர் யாதவர் நலச்சங்கம் சார்பில் 23 ம் ஆண்டு பரிசளிப்பு மற்றும் பொதுக்குழு
கூட்டம் 20.8.2017 அன்று நடைபெற்றது.
விழாவில்
தலைவர் சண்முகசுந்தரம் யாதவ் தலைமை வகித்தார். செயலாளர் பாபநாசம் யாதவ் வரவேற்புரை
ஆற்றினார். பொருளாளர் வரவு செலவு அறிக்கையை வாசித்தார். பாளை பணிநிறைவு காவல்துறை
கூடுதல் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் யாதவ், யாதவர் பண்பாட்டுக்கழகம் மேனாள்
செயலாளர் நாகராஜன் யாதவ், ராமசாமி யாதவ், கோபால் யாதவ், கணபதி யாதவ் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் SSLC மற்றும் +2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்
பெற்ற சாந்திநகர் யாதவ நலச்சங்க உறுப்பினர்களின் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது. விழா நிறைவில் பெல் அமோர்சஸ் காலனி II இணை செயலாளர் முத்தையா யாதவ்
நன்றி கூறினார்.

No comments:
Post a Comment