மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 8 August 2017

மர்மகாய்ச்சல் எதிரொலியால் கல்லூரி விடுமுறை.




தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு மலையடிவாரம் அருகே உள்ளது கிள்ளிக்குளம். அங்கு தமிழ்நாடு வேளாண்மைக்கழகத்தைச் சேர்ந்த வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். அனைவரும் கல்லூரி வளாகத்தில் உள்ள பயணியர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளன. இந்த மாணவ மாணவிகள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள்.

கடந்த 3ம் தேதி கல்லூரி சார்பில் ஊட்டி சுற்றுலா சென்று மறுநாள் வந்துள்ளனர். மறுநாள் திடிரென்று 10 மாணவிகளுக்கு மர்மகாய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனே அவர்களை திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மீண்டும் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் மர்மகாய்ச்சல் தாக்கியது. இதில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கேரளாவைச் சேர்ந்த டயானா(19), திண்டுக்கல்லைச் சேர்ந்த தாரிணி(18) ஆகியோர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் டயாணாவிற்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்து. இதற்கிடையில் மாணவியர் விடுதியில் தங்கியிருந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

உடனே கல்லூரி முதல்வர் ராமலிங்கம் 16ம் தேதி வரை கல்லூரியை மூட உத்தரவிட்டார். நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் உத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரியில் பயின்ற மாணவிகள் அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். கல்லூரி மூடப்பட்டது.                        

No comments:

Post a Comment