பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையேயான
மண்டல அளவிலான உள்விளையாட்டுகள் கலசலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரி ஸ்ரீரிவில்லிபுத்தூரில்
நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி , விருதுநகர் மாவட்ட 15 பாலிடெக்னிக் அணிகள் கலந்து கொண்டன.
இப்போட்டிகளில் ஸ்காட் பாலிடெக்னிக் மாணவர்கள்
செஸ், போட்டியில் முதலிடமும் , கேரம், இறகுபந்து , மேஜைபந்து போட்டிகளில் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் கோயம்புத்தூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி
பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களை
ஸ்காட் நிறுவனர் டாக்டர் கிளிட்டஸ்பாபு , நிர்வாக இயக்குநர் திரு அருண்பாபு , ஸ்காட் பாலிடெக்னிக் முதல்வர் திரு.மணிமாறன் , துணை முதல்வர் திரு.முருகன், உடற்கல்வி இயக்குநர்கள் திரு.அன்வர் ராஜா , திரு.சுந்தர் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

No comments:
Post a Comment