இந்திய நூலகத்தந்தை பத்மஸ்ரீ முனைவர்.எஸ்.ஆர்.அரங்கநாதன்
அவர்களின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஐ.ஐ.டி நூலகத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை நூலகச் சங்கம் தேசிய அளவில் நூலகத் துறையில் சிறப்பாக சேவைப் புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நல்நூலகர் விருது வழங்கி சிறப்பிக்கும். நூலகத்துறையில் ஒருவருடைய திறன், பணிமேம்பாடு,
சேவை, கணினிமயமாக்கல் போன்றவற்றை அளவுகோலாக வைத்து இவ்விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகின்றது.
இந்த வருடத்திற்கான நல்நூலகர் விருதினைபாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பாகல்லூரியின்; நூலகம் மற்றும் தகவல்அறிவியல் துறையில் துணை நூலகராகப்பணிபுரிந்து வரும் திரு.எம்.மணி என்பாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. சென்னையில்நடைபெற்ற இவ்விழாவில் சென்னைபல்கலைக்கழகத்தின் முன்னாள்துணைவேந்தர்பேராசிரியர்.முனைவர்.டி.விஸ்வநாதன்இநூலகத்தந்தை பத்மஸ்ரீமுனைவர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின்நண்பர் திரு.பார்த்தசாரதி ஆகியோர்இவ்விருதினை வழங்கிக் கௌரவித்தனர். இவ்விழாவில் சென்னை நூலகச் சங்கத்தின்மாநிலத் தலைவர்முனைவர்.திரு.நித்தியானந்தம்இ சென்னைப்பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல்அறிவியல் துறையின் முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர்திருமதி.மனோரமா ஸ்ரீநாத்இபொதுநூலகத்துறையின் இயக்குநர்முனைவர்.திரு.எஸ்.கண்ணப்பன் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.
‘தேசிய நல்நூலகர் விருது’ பெற்றகல்லூரியின் துணை நூலகர்திரு.எம்.மணிக்கு கல்லூரிமுதல்வர்(பொறுப்பு) பேராசிரியர் திரு.ரஃபிஅகமதுஇ கல்லூரி இயக்குநர்முனைவர்.அ.அப்துல்காதர்இ கல்லூரி நூலகர்முனைவர்.திரு.ஆர்.ஆர்.சரவணக்குமார்ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.

No comments:
Post a Comment