மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 28 August 2017

பேனர் போஸ்டர்களுக்கு பதில் மரக்கன்றுகள் கொடுத்து அசத்திய தல ரசிகர்கள்.



நடிகர் அஜித்குமார் தனது இயல்பான நடிப்பில் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். மிகவும் எளிமையானவர் அவரை போல அவரது ரசிகர்களும் பின்பற்றி வருகின்றனர். அஜித்குமார் தனது ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்படுகிறார். 

தல அஜித்குமார் நடிப்பில் விவேகம் திரைப்படம் 24-8-17 அன்று வெளியானது.  தூத்துக்குடியில் கிளியோபாட்ரா திரையரங்கில் விவேகம் திரைப்படம் வெளியானது. முதற்காட்சியில் அஜித் ரசிகர்கள் 1057 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கி அசத்தினர்.


சுந்தரவேல்புரம் நல்ல மனிதனின் (தல) ரசிகர்கள் சார்பில் வால்போஸ்டர்கள்  என்று செலவு செய்யாமல் மரக்கன்று வழங்கியுள்ளது அனைவரிடத்திலும் பாராட்டை வாங்கியுள்ளது. இவர்கள் தூத்துக்குடியில் 200க்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நட்டி வளர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.


அனைத்து ரசிகர்களும் இவ்வாறு செய்தால் நல்லதே...!

No comments:

Post a Comment