ஸ்பிக் தூத்துக்குடி கலை மன்றம் சார்பில் நெல்லை மற்றும்
தூத்துக்குடி பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான நடனப் போட்டிகள் ஆலை வளாகத்தில் நடந்தது. இதில் 12 கல்லூரிகள் கலந்து கொண்டன. பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், கிராமிய நடனம் போன்ற போட்டிகள் நடைபெற்றன.
நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல்
கல்லூரி போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவியரை ஸ்காட் கல்வி குழுமங்களின்
நிறுவனர் முனைவர் எஸ்.கிளிட்டஸ் பாபு, துணை நிறுவனர் முனைவர் அமலி கிளிட்டஸ், நிர்வாக
இயக்குநர் திரு.சி.அருண்பாபு, பொது மேலாளர்(நிதி) திரு.இக்னேஷியஸ் சேவியர், கல்லூரி
முதல்வர் முனைவர் வி.இளங்கோவன், நிர்வாக அதிகாhரி திரு.எஸ்.கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர்
திரு.ஜெ.சதீஷ்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டினர்.

No comments:
Post a Comment