திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்
தொடர்ச்சி மலையில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக மாவட்ட
நிர்வாகத்தினால் “சாரல் விழா” ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நெல்லை மாவட்டம் குற்றாலம் சாரல்
திருவிழாவில் நாள் தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு. பரிசுகள் வழங்கப்பட்டு
வருகிறது. அதன்படி ஆறாம் நாளான இன்று கோலப் போட்டி மற்றும் கொழு கொழு குழந்தைகள்
போட்டி நடைபெற்றது.
சாரல் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று கோலப் போட்டி மட்டுமின்றி
கொழு கொழு குழந்தைகள் போட்டியும் நடந்தது.
இப்போட்டியில் கொழு கொழு குழந்தைகள்
தனது மந்திர சிரிப்புடன் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.




No comments:
Post a Comment