நெல்லை மாவட்டம்
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு அரிஹர
விநாயகர் கோவில் பகுதிகளில் குடுநீர் சரியாக வழங்காததால் பொதுமக்கள் பலமுறை நகராட்சியிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்காததையும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத நகராட்சி
நிர்வாகத்தை கண்டித்தும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த முற்றுகையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

No comments:
Post a Comment