மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Thursday, 24 August 2017

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கேலிவதை விழிப்புணர்வு நிகழ்ச்சி




                பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 22.08.2017 அன்று அரசுதவிபெறாப் பாடப்பிரிவுகளின் சார்பாக கேலிவதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்த் துறை (அரசுதவிபெறாப் பாடப்பிரிவு) தலைவர் முனைவர் அனுசுயா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி அரசுதவிபெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று தலைமையுரையாற்றினார். 



             மத்திய சிறையின் சிறைத்துறைக் கண்காணிப்பாளர் திரு. ஜி.பி. செந்தாமரைக் கண்ணன் அவர்களும் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கேலிவதையினால் ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்தும் கேலிவதை தொடர்பான சட்டதிட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினர். கேலிவதைத் தடுப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறைப் பேராசிரியருமான திரு. எம். சாதிக் அலி நன்றி கூறினார். அரபுத் துறைப் பேராசிரியர் திரு. முகம்மது இலியாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர். 

No comments:

Post a Comment