மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday, 30 August 2017

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் இடுபொருள் வியாபாரிகள் சங்க 27வது மாநாடு





திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் இடுபொருள் வியாபாரிகள் சங்;க 27வது மாநாடு நெல்லை சந்திப்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சங்க செயல்பாடுகள் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தல் மற்றும்  வியாபாரத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்தும்   விவாதிக்கப்பட்டது.   மேலும்  மாநில   அளவிலானநிர்வாகிகள் உரம் பூச்சிமருந்து விதை கம்பெனிகளின்   பிரதிநிதிகள்  மற்றும் விற்பனையாளர்களுடன் கலந்துரையாடல்  நிகழ்ச்சி நடைபெற்றது.

விவசாயிகள் இடுபொருள் வியாபாரிகள் சங்க மாநிலதலைவர் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் கனகராஜ், சிவகிரி   மாவட்ட துணைத்தலைவர்   சக்கராஜா,   மாவட்ட இணைச்செயலாளர்   நாகூர்மைதீன்  மாவட்ட துணைத்தலைவர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாவட்ட இணை செயலாளர் முருகன்  வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர்   ராஜகுரு வரவு செலவு கணக்கு சமர்பித்தார். நெல்லை  மாவட்ட தலைவர் குலாம்நபி  முகைதீன் தலைமை உரையாற்றினார். இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர். மாவட்ட  துணைச் செயலாளர்  ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment