மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday 30 August 2017

மக்கள் மறுமலர்ச்சி தடம் அமைப்பின் சார்பில் பாளையில் கருத்தரங்கம் நடந்தது



மக்கள் மறுமலர்ச்சி தடம் அமைப்பின் சார்பில் கருத்தரங்கம் பாளையில் நடந்தது. கொல்லத்தை சார்ந்த டாக்டர் மனோகரன் தலைமை வகித்தார்.   டாக்டர்கள் சுந்தராஜன், கனிராஜ் தமிழரசி சௌந்தர் ஆகியோர்முன்னிலை வகித்தனர். மத்திய மாநில எசி.எஸ்.டியின் நெல்லை மாவட்ட  தலைவர் அரிராம் அனைவரையும்  வரவேற்று பேசினார்.

இடஒதுக்கீடு நமது உரிமை என்ற தலைப்பில் டாக்டர் ராம்நாத் இட ஒதுக்கீடு  ஒர் உளவியல் பார்வை எனும் தலைப்பில் டாக்டர் பன்னீர் செல்வன்,  இடஒதுக்கீடும் அரசியலமைப்பு   சட்ட அங்கீகாரமும் எனும் தலைப்பில், சாதியவாத மதவாத கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபுஜீவா, இடஒதுக்கீடு புரிதல் ஆய்வு எனும் தலைப்பில் கோவை ராஜா ஆகியோர்  சிறப்புரையாற்றினார்கள். 

சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்கள் ராமகுரு வைரமுத்துராஜ், பால்ராஜ், முத்துராஜன், ஈஸ்வரபாண்டியன், பாலாசங்கர், பேராசிரியர்கள் சித்தார்த்தன், செல்லப்பா, நாகூர்கனி  மற்றும் வக்கில் பிரபு உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கின் நிறைவாக எல்..சி முத்துசாமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment