திருநெல்வேலி பாளையங்கோட்டை ஸ்ரீ காந்திமதி அம்மாள் மகளிர்
மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு சமூக நலத்துறையின் மூலம் குழந்தை திருமண
தடை சட்ட விழிப்புணர்வு போஸ்டல் அட்டைகள் வழங்கும் விழா இன்று (08.08.2017)
நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப, அவர்கள் கலந்து கொண்டு 9 முதல் 12 வரை பயிலும் 377 மாணவிகளுக்கு குழந்தை திருமண தடை சட்ட விழிப்புணர்வு போஸ்டல்
அட்டைகள் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது.
தமிழக அரசு கல்விக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது.
குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை ஊக்க படுத்தி வருகிறது.பெண்களின்
திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு குறைவாக திருமணம் செய்வது குழந்தை திருமண தடை சட்டத்தின்
கிழ் குற்றமாகும். நிங்கள் அனைவரும் சிறப்பாக உயிர் கல்வி பயில வேண்டும், இப்போதே உங்களுக்கு என குறிக்கோளை ஏற்படுத்தி அதை அடைய முயற்சிக்க
வேண்டும், உயர் கல்வி முடித்து வேலை வாய்ப்பை
பெற்று பெற்றோருக்கு உதவிட வேண்டும் இதன் மூலம் தன்னம்;பிக்கையும், பொருளாதார மேம்பாடும் அடைய முடியும்
திருநெல்வேலி மாவட்டத்தில் 333 பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு
குழந்தை திருமண தடை சட்ட விழிப்புணர்வு போஸ்டல் அட்டைகள் வழங்கப்படும். குழந்தை
திருமணங்களை கண்டறிந்து முழுமையாக தடை செய்ய மாணவிகளுக்கு விழிப்புணர்வுவை
ஏற்படுத்திடவும்,மாணவிகள் உற்றார் உறவினர்,தோழிகளுக்கு குழந்தை திருமணம் செய்திட முயற்சித்தாலும், வேறு பல தொந்தரவுகள் இருந்தாலும் இந்த அட்டையை பயன்படுத்தி மாவட்ட
ஆட்சியர்ருக்கு தகவல் தெரிவிக்கலாம். உங்களது கடிதத்தின் மீது சம்மந்தப்பட்ட
அலுவலர்கள் மூலம் ரகசியமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி எஸ்.முத்துலெட்சுமி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு.சாத்தையா, பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.சிவகாமசுந்தரி மற்றும் ஆசிரியர்கள்,
மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment