பாளை
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர் பா. முகம்மது சம்சுதீன் சிறந்த பேச்சாளர்
விருதான “சொல்மணிச் செல்வர்
விருது” பெற்றார்.
மதுராந்தகம்,
மேலக்காண்டையில் உள்ள மகாகவி பாரதி நற்பணி
மன்றத்தின் சார்பாக 15.08.2017 அன்று நடந்த
சுதந்திர தின முப்பெரும் விழாவை முன்னிட்டு சிறந்த தமிழ் கலைஞர்களுக்கான விருது
வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்
சிறந்த பேச்சாளராக சன் தொலைக்காட்சியின் காமெடி ஜங்ஷன் நிகழ்ச்சியில் நடிகராகவும்,
மக்கள் தொலைக்காட்சியின் நெறியாளராகவும்,
சிறந்த பட்டிமன்ற பேச்சாளராகவும், கல்லூரி அளவிலும், பல்கலைக்கழக அளவிலும், மாநில அளவிலும் பேச்சுப் போட்டிகளில் கலந்து
கொண்டு சாதனைப் படைத்த சாதனை மாணவர் திரு. பா. முகம்மது சம்சுதீன் அவர்களைப்
பாராட்டி “சொல்மணிச் செல்வர்”
என்ற விருதினை மகாகவி பாரதி நற்பணி மன்றம்
வழங்கியது.
விருது பெற்ற
மாணவரை கல்லூரியின் பொறுப்பு முதல்வர் கா. ரபி அகமது அவர்களும் ஆட்சிக்குழு
உறுப்பினர்களும், இளைஞர்
நலத்துறையின் ஒருங்கிணைப்பாளர் பேரா. அ.மு. அயூப்கான் அவர்களும், பேராசிரியப் பெருமக்களும் , மாணவ மாணவியரும் பாராட்டினர்.

No comments:
Post a Comment