மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 18 August 2017

நெல்லை ஸ்டார் மற்றும் ரோட்டரி கழகம் சார்பில் வாய்புற்று நோய் பல் இலவச மருத்துவ முகாம்.




திருநெல்வேலி ஸ்டார் மற்றும் ரோட்டரி கழகம் சார்பில் வாய்புற்று நோய் பல் இலவச மருத்துவ முகாமினை நெல்லை டவுண் தாயம்மை அம்மாள் நடுநிலப்பள்ளியில் நடத்தியது. இம்மருத்துவ முகாமில் இலவச பல்மருத்துவ ஆலோசனை மற்றும் சர்க்கரை நோய் கண்டறிதழ் இரத்த அழுத்தம் அறிதழ் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 

நெல்லை ஸ்டார் ரோட்டரி கழக தலைவர் செய்யதுஅலி, செயலாளர் ராஜ்பால், டவுண் ரோட்டரி கழகம் சார்பில் தலைவர் திவாகர், செயலாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இம்மருத்துவ முகாமிற்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி உதவி ஆளுநர் பாலகுரு மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் மாரியப்பன், மாரீஸ், ராமலிங்கம், பாலா ஆகியோர் கலந்து கொண்டனர். 

அனைவரையும் பள்ளி தாளாளர் கணேஷ்குமார் வரவேற்றார் மேலும் இப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திருநெல்வேலி ஸ்டார் ரோட்டரி தலைவர் செய்யது அலி தேசிய கொடியேற்றி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் ராஜ்பால் முன்னாள் தலைவர் மாரியப்பன்  மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment