தச்சை வேதிக் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் நாட்டை காக்கும் வீரர்களைப் போற்றும் விதமாக காவலர்கள் தினம் கொண்டாப்பட்டது. இதில் பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ் தலைமை தாங்கினார், இயக்குநர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி மழலையர்கள் இராணுவ வீரர், காவலர், கப்பல்படைவீரர் போன்ற நாட்டைக் காக்கும் வீரர்கள் போன்று உடையணிந்துகொண்டு தோன்றினர்.
இதனைப்பொருட்டு பள்ளித் தாளாளர் கூறுகையில் மழை, வெயில் என்று பாராமல் தன் உயிர் மீது பயம் கொள்ளாமல் இரவு பகலாக கண் அயராது எப்போதும் காவல் காத்துக்கொண்டிருக்கும் நமது நாட்டு இராணுவ வீரர்கள் மற்றும் காவலர்கள் போன்றவர்களை பாராட்டும் விதமாக நாம் இந்த விழாவினை கொண்டாடி வருகின்றோம். இதுபோன்று நளைய இளைஞர்களாக நீங்கள் வீட்டிற்கு ஒருவர் வீதம் நாட்டிற்க்காக நம்மை அர்பணிக்கவேண்டும் என்றார். அதோடு நாட்டுப்பற்று உள்ளவர்களாக நாம் வாழ கற்றுக்கொள்ளல் வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி முதலவர் சோமசுந்தரி, மேலாளர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி மற்றும் மாணவ மாணவியர்கள், ஆசிரிய ஆசிரியைகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment