நெல்லை தூத்துகுடி மண்டல கனரா
வங்கிகளில் 750 வாடிக்கையாளர்களுக்கு ரூ.65கோடி கடனுதவி வழங்கப்பட்டது. நெல்லை
தூத்துகுடி மண்டலங்களை உள்ளடக்கிய கனரா வங்கிகள் சார்பில் வீட்டு வசதி கடன், அடமானக்கடன், தொழிற்கடன், விவசாயக்கடன், தனிநபர்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள்
வழங்கும் நிகழ்ச்சி 100 கனரா வங்கி கிளைகளில் நடந்தது. பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இதற்கான
நிகழ்ச்சி நடந்தது. மதுரை வட்டார கனரா வங்கி துணை பொது மேலாளர் சண்முகம் முகாமை
துவக்கி வைத்தார். நெல்லை மண்டல மேலாளர் செல்வராஜன், தூத்துகுடி உதவி பொது மேலாளர்
மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
பாளையில் நடந்த விழாவில் 40 பயனாளிகளுக்கு ரூ16 கோடி கடனுதவிகளை
துணை பொது மேலாளர் சண்முகம் வழங்கினார். இதில் கோட்ட மேலாளர்கள் வெங்கட் இளங்கோ, செல்வின் ஞானதாஸ், முகம்மது இஸ்மாயில், வைகுண்டம், முதுநிலை மேலாளர்கள்
பாலசுப்பிரமணியம், முருகையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை, தூத்துகுடி
மண்டலத்திலுள்ள 100 கனரா வங்கி கிளைகள் சார்பாக 750 பயணாளிகளுக்கு ரூ65 கோடி கடனுதவி
அளிக்கப்பட்டதற்க்கான ஒப்புதல் கடிதம் இம்முகாமில் வழங்கப்பட்டதாக கனரா வங்கி
அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் அக்டோபர் 31ம்தேதி வரை கடனுதவி வழங்கும் முகாமில்
எவ்வித பரிசீலினை கட்டணமும் இல்லாமல் கடனுதவிகளை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment