மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 25 August 2017

தூத்துக்குடியில் கரை ஒதுங்கிய அரியவகை திமிங்கல சுறா மீன்



மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இந்த உயிரினங்களை வேட்டையாடாமல் தடுக்கும் வகையில்  மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர்  ரோந்து  பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி வியாழக்கிழமையன்று  கடற்கரையோரங்களில் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே கடற்கரையில் அரியவகை திமிங்கல சுறா மீன் இறந்த நிலையில் ஒதுங்கி கிடந்தது. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனவர் சோனை, வனகாப்பாளர் சடையாண்டி மற்றும் வேட்டைதடுப்பு காப்பாளர்கள் கடற்கரையில் ஒதுங்கி கிடந்த மீனை ஆய்வு செய்தனர். 


இந்த திமிங்கல சுறாமீன் சுமார் 1லு டன் எடையும், 4 மீட்டர் நீளமும்  இருந்தது. இதன் மேல்பகுதிகருப்பு நிறத்திலும், அதில் சிறிய வெள்ளை நிற புள்ளிகளும் காணப்பட்டன. இதன் வால் பகுதி இரண்டாக பிரிந்த துடுப்புடன் காணப்பட்டது. இந்த வகை சுறா மீன்வேட்டையாடாது. இதனால் வாய் தட்டையாகவும், பற்கள் இல்லாமலும் இருக்கும். இவை தண்ணீரை வாய்க்குள் உறிஞ்சும். அதில் உள்ள சிறிய உயிரினங்களை வடிகட்டிஉணவாக உட்கொள்ளக்கூடியவை. ஆழ்கடல் பகுதியில் வசிக்கக்கூடியது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் அரியவகை உயிரினத்தில் இதுவும் ஒன்றாகும்.

சுறா மீனில் எந்த வித வெளிக்காயங்களும் இல்லாமல் இருந்தது. இதனால் சுறாமீன் வழிதவறி ஆழம் குறைந்த பகுதிக்கு வந்து இருக்கலாம். மீண்டும் கடலுக்கு செல்லமுடியாமல் இறந்து கரையில் ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு தூத்துக்குடி கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டார். சம்பவ இடத்திலேயேதிமிங்கல சுறாமீன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அங்கு கடற்கரையோரத்தில் புதைக்கப்பட்டது.

No comments:

Post a Comment