மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 15 August 2017

பாளை சிஐடியூ மாநாடு நடைபெற்றது.



நகை மதிப்பீட்டாளர் ஊதியம் பறிப்பு பாளை சிஐடியூ மாநாட்டில் கண்டனம். கூட்டுறவு நிர்வாக செலவு என்ற பெயரில் நகை மதிப்பீட்டாளர் ஊதியம் பறிக்கப்படுவதற்கு பாளை சிஐடியூ மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

 நகை மதிப்பீட்டாளரின் முதலாவது மாநாடு பாளையில் நடைபெற்றது. சிஐடியூ நகை மதிப்பீட்டாளர் சங்க தலைவர் செந்தில் தலைமை வகித்தார். துணை செயலாளர் மகாராஜன் வரவேற்றார் பாலசுப்பிரமணியன் சங்க கொடியேற்றி வைத்தார்.

 நகை மதிப்பீட்டாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்,  கூட்டுறவு நிர்வாக செலவு என்ற பெயரில் நகை மதிப்பீட்டாளர் ஊதியம் பறிக்கப்பதை கண்டித்தும், இதை தடுத்து நிறுத்த கோரியும், அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாக குழு உறுப்பினர் கார்திகேயன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment