குமரி மாவட்டத்தில் த.மா.கா. சார்பில் கொடியேற்று விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமையன்று குளச்சலுக்கு ஜி.கே.வாசன் வருகை தந்தார்.
த.மா.கா. மீனவர் அணி சார்பில் இனயம் வர்த்தக துறைமுகம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்று கொண்டஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இனயம் வர்த்தக துறைமுகம் அமைக்க அரசு 100 சதவீதம் பாதுகாப்பு உத்தரவு தந்தால் தான் த.மா.கா. ஆதரிக்கும். ஒரு தரப்பினர் துறைமுகம் வேண்டாம் என்றும் மற்றொரு தரப்பினர் வேண்டும் என்றும் சொல்ல என்ன காரணம்? மீனவர்களுக்கு மாற்று தொழில்தெரியாது. புதுக்கோட்டையில் மீத்தேன் எரிவாயு எடுக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அரசு திட்டங்களை மக்கள் மீது திணிக்கக்கூடாது.
திட்டம் கொண்டு வந்தால் அது குறித்து மக்களிடம் விளக்கி பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தகுளச்சல் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஆட்சியாளர்கள்முறையாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment