நெல்லை மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக சாரல் மழைபெய்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த சாரல் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்கும் போது ஆபத்து ஏற்படும் என்பதால்சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
செவ்வாய்கிழமையன்று காலை வரை இந்ததடை நீடித்தது. காலை சுமார் 8.30 மணிக்கு வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதைத்தொடர்ந்து சுற்றுலாபயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், குறைவான சுற்றுலா பயணிகளே அருவிகளில் குளித்து சென்றனர்.
வழக்கமாக குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்தான் சீசன் இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் 15ம் தேதிக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகைகுறைந்து விடும். அருவிகளில் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் கூட்டம் குறைவாகவே இருக்கும்.தற்போது மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தற்போது பெய்த மழையினால் குற்றாலம் சீசனுக்கு பயன்இல்லாமல் இருந்தாலும் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் இந்த தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால்விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

No comments:
Post a Comment