தெற்கு ரெயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் நீனு இத்ரேயா இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்மூலம் செவ்வாய்கிழமையன்று பகல் 12.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வந்தார்.அவரை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் சிவசங்கரநாராயணன் வரவேற்றார். பின்னர் அவர் ரெயில்நிலையத்தை ஆய்வு செய்தார்.
நடைமேடைகளில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் சரியாகவருகிறதா? ரெயில் பெட்டிகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். மேலும் நகரும்படிக்கட்டுகள் சரியாக வேலை செய்கிறதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ரெயில் நிலையத்தில்நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர்நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்கள்சரியாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தேன். நெல்லை-நாகர்கோவில்,நெல்லை-மதுரை இடையே இரட்டை ரெயில்பாதை திட்ட பணிகள் மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல்கிடைத்தவுடன் தொடங்கும். செங்கோட்டை-புனலூர் ரெயில் பாதை பணிகள் கட்டுமான பிரிவில்தகவல் கேட்ட பிறகு தான் தெரிவிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment