மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 29 August 2017

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.




நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பலத்த  மழைபெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.  திங்கள்கிழமையன்று திடீரென வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது.  

மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது.  இதே போல் ஐந்தருவியிலும்   வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில்சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். அதன் பின்னர் வெள்ளம் குறைந்ததைஅடுத்து, அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.

 இந்த நிலையில் கடந்த சில நாட்களாகஅனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமான அளவில்   விழுந்து வருகிறது. கடந்த 2 நாட்களாககுற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர்  வரத்து நன்றாக உள்ளது, திங்கள்கிழமையன்று  சுற்றுலா பயணிகள் ஏராளமானோர்  குற்றாலத்திற்கு வந்து குவிந்தனர். அவர்கள், அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment