மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday 27 October 2017

கொக்கிரக்குளம் காசிவிஸ்வநாத கோவிலில் சூரசம்ஹாரம்






திருநெல்வேலி மாநகராட்சி கொக்கிரக்குளம் அருள்மிகு காசிவிஸ்வநாத சமேத விசாலாட்சி திருக்கோவில் சூரசம்ஹார  நிகழ்ச்சி நடைபெற்றது. 

கந்தசஷ்டியை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி கொக்கிரக்குளம் அருள்மிகு காசிவிஸ்வநாத சமேத விசாலாட்சி திருக்கோவில் சுவாமிக்கு காலையில் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. மாலையில் சுப்பிரமணியசுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளி கஜமுகநாதன், சிங்கமகாசூரன், சூரபத்மன், ஆகியோரை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 கந்தசஷ்டி விழாவின் ஏற்பாட்டினை திருக்கோவில் தர்மகர்த்தா ராமலெட்சுமி, மற்றும் கோவில் அர்ச்சகர் கணேஷன் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

செய்தி மற்றும் படம்
திரு. முத்து.

Tuesday 24 October 2017

நம்ம ஊரு நாயகர் - திருமதி. ராஜலெட்சுமி



திருநெல்வேலி பாளையங்கோட்டை கோபால சாமி கோயில் எதிரில் 4 வருடமாக நடைபெற்று வரும் ஸ்ரீ  கோமதி ஹோட்டல் உரிமையாளர் திருமதி ராஜலக்ஷ்மி அவர்கள்.

தங்களின் அறிமுகம்:

என் பெயர் ராஜலக்ஷ்மி. திருநெல்வேலி பாளையங்கோட்டை கோபாலசாமி கோயில் எதிரில்  4 வருடமாக ஸ்ரீ கோமதி ஹோட்டல் நடத்தி வருகிறேன். கணவர் பெயர் ராஜசேகர், மகள் பெயர்  வித்யாஸ்ரீ மதி.

உங்களுடைய அப்பா அம்மா பள்ளி படிப்பு கல்லூரி படிப்பு பற்றி சொல்லுங்க.

அப்பா திரு. முத்துகிருஷ்ணன், Rtd. EB Worker. அம்மா திருமதி லலிதா House wife. உடன் பிறந்தவர்கள் 6 பேர். அண்ணா : Engineer, தூத்துக்குடி. அக்கா : House Wife, அத்தான் ரயில்வே ஊழியர். பள்ளி படிப்பு ஒரு கிராமம்  ஸ்ரீ குமரகுருபரர் பள்ளி.  12-ம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண். கல்லூரி மதுரை காமராஜர் யுனிவர்சிட்டி. B.Com.,

இந்த தொழிலில் உங்களுக்கு முதுகெலும்பாக இருந்து உங்களுக்கு உதவிய நபர் யார்?

எனது சிறு வயது முதல் ஹோட்டல் வைத்து நடத்த ஆசை உண்டு. அனால் வெளிக்காட்டியது இல்லை. பிறகு எனது கணவர் வியாதி பட்ட அந்நாட்களில் நான் எதாவது ஒரு தொழில் செய்து ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயமான நாட்கள் வரும் போது இந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து தொழில் ஆரம்பித்தேன். எனது  முதுகெலும்பாக உற்ற துணையாக இருந்து திறம்பட மிளிர செய்ய  எனக்கு உதவிய மிக பெரிய சக்தி தெய்வ அனுக்ரகம், குரு நாதருடைய (ஸ்ரீ கோமதி தாசன், கல்லிடைக்குறிச்சி) அனுக்ரகம் மட்டுமே. இதில் பெரிதும் உதவியது என் தந்தை. உன்னால் என்ன முடியுமோ அதை செய், என்னால் முடிந்த உதவியை நிச்சயம் செய்வேன் என்ற தன்னம்பிக்கையின் வார்த்தைகள் பெரிதும் ஊன்றுகோலாக இருந்தது. என் சகோதர சகோதரிகளும் பொருளாதார ரீதியாக உதவி செய்தார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய முக்கியமான ஊன்றுகோலாக இருந்தது எனது மகள் வித்யா ஸ்ரீ மதி. தொழிலில் ஏற்ற இறக்கங்கள் வரும்போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்று தொழில் ரீதியான ஆலோசனைகள் கொடுத்து பெரும் உதவியாக செயல்பட்டாள். சென்னையில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடிச்சிருக்காங்க. 194 மதிப்பெண்கள் வைத்திருந்தார்கள். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை தெரிந்தெடுத்து படித்து இப்போது சென்னையில் பணி செய்து வருகிறார்கள். படித்து கொண்டிருக்கும் போதே வேலைக்கு தெரிந்தெடுக்க பட்டு அநேக அவார்ட்கள் வாங்கி பெருமை சேர்த்துள்ளாரகள். தொழில் விஷயங்கள் அநேகம் கற்று கொடுத்தது என்னுடைய நண்பர் பெருமாள் அவர்கள். அவரிடம் இருந்து அநேக காரியங்களை கற்று கொண்டேன். மேலும் ஆதரவு அளித்தது திரு. லோகநாதன் அவர்கள்.

பள்ளி படிப்பு கல்லூரி படிப்பு முடித்து பின்பு மனைவி அதன் பின்பு தாய்மை இந்த சந்தோசத்தை தாண்டி உங்க சிறு வயது ஆசை நிறைவேறிய இந்த சந்தோசம் எப்படி உணருகிறீர்கள்? இந்த ஆசையின் தூண்டுதல் என்ன?

ரெம்ப சந்தோஷம். ஆசை நிறைவேறியதன் காரணம் குடும்ப சூழ்நிலை மட்டுமே.

இந்த தொழிலில் உங்களுடைய இலக்கு என்ன? அதை அடைந்து விட்டீர்களா? அல்லது முயற்சித்து கொண்டிருக்கிறீர்களா?

சூழ்நிலையின் காரணமாக ஆரம்பித்தேன். ஆனால் நல்ல பெயர் சம்பாதித்து உள்ளேன். ஸ்ரீ கோமதி என்றாலே நல்ல தரம் என்ற நற்பெயர் கிடைத்துள்ளது.  ஸ்ரீ கோமதி இன்டர்நேஷனல் ஆக்க வேண்டும் என்பது ஆசை. கடவுளின் அனுக்கிரகம் இருந்தால் நடக்கும்.

ஹோட்டல் என்பது ஆண்கள் எடுத்து நடத்தும் ஒரு தொழில். அனால் இந்த காலத்தில் அநேக காரியங்கள் பெண்களால் முடியும் என்று சாதித்து காட்டுகிறார்கள். இருப்பினம் இந்த திருநெல்வேலி மாநகரத்தில் ஒரு பெண்ணாக இருந்து இந்த தொழிலை ஆரம்பித்து 5-ம் ஆண்டு வெற்றி பாதையை நோக்கி பயணம் செய்றீங்க. உங்க வெற்றிக்கு பின்னால் எத்தனை தடைகள், எத்தனை கஷ்டங்கள் அனுபவிச்சிருக்கீங்க?

தொழில் என்றாலே கஷ்டம் உண்டு. அனால் நான் ஆரம்பிக்கும் போது எந்த தடையும் இல்லை. ஆரம்பித்த பிறகு என் உறவினர்கள் ஏன் இந்த தொழிலை ஆரம்பித்தாய் என்று அநேக வார்த்தைகள் பேசினாங்க. இருப்பினும் அந்த வார்த்தைகளை தாண்டி இவ்வளவு நாட்கள் நடத்தி விட்டேன். பொதுவாக உழைப்பு நேர்மை இந்த இரண்டையும் தாரக மந்திரமாக வைத்து செயல்படும் போது தொழில் மென்மையாக நடைபெறும். குறிப்பாக பணம் சார்ந்த இலாபம் அடைய எப்படி வேண்டுமானாலும் தொழில் செய்யலாம் என்ற எண்ணம் இல்லாமல் இப்படி தான் என்ற ஒரு குறிக்கோள், ஒரு திட்டம் வைத்து செயல்பட்டால் சுலபமாக நடத்தலாம். அனால் தொழிலில்  இப்படி மென்மை ஒருபக்கம் இருந்தாலும் கரடு முரடான பாதைகள் இன்னொரு பக்கம் கண்டிப்பாக இருந்தே ஆகும். ஆனால் அதனை எதிர்கொள்ள  தொடங்கி விட்டால் அந்த கரடு முரடு பாதையிலும் நமக்கு இயற்கையாகவே வழி கிடைத்து விடும் என்பது உறுதி.

உங்கள் சிறு வயது ஆசை ஹோட்டல் தொடங்கி பல தடைகளை வெற்றி படிகளாய் மாற்றி வந்துட்டீங்க. இப்போது உங்கள் இலக்கு அதாவது ஸ்ரீ கோமதி இன்டர்நேஷனல் என்ற இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை இருக்குதா? 4 வருடங்களுக்கு முன்பு நீங்கள் தொடங்கிய இந்த தொழிலில் இப்போ உள்ள மாற்றங்கள் முன்னேற்றம் உள்ளதாக இருக்கிறதா?


ஆரம்ப நாட்களில் 10-க்கு 10 என்ற அளவில் ஒரு இடத்தில் தொடங்கினோம். நான் என்னோடு திரு. லோகநாதன் மற்றும் உதவிக்கு 2 பேர் வைத்து காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை வேலை வேலை  ஓய்வில்லாமல் வேலை செய்தோம். அந்த உழைப்பின் பலன் என்னவென்றால்  இப்போது எனக்கு கீழ் 14 பேர் பணி செயகிறார்கள். மட்டுமல்லாமல் தொழிலும் லாபகரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் விரிவடைந்து இன்னும் சிறப்பாய் அமைய ஆசை படுகிறோம். அதற்கான முயற்சிகளையும் மேற்கோளாகிறோம்.

உங்கள் மகள் உங்கள் வெற்றிக்கு ஆதரவாக இருப்பாங்களா?

நிச்சயம் 3 வருடம் சென்னையில் பணி செய்து மீண்டும் என்னோடு வந்து உதவியாக இருப்பாங்க. பிற்கால வளர்ச்சிக்கு பெரிதும் ஊன்றுகோலாக இருக்கப்போவது என் மகள் தான்.

ஆண் பெண் ஏற்ற இறக்கங்கள் சமுதாயத்தில் இன்னும் இருக்கிறதா? உங்களை இந்த சமுதாயம் எப்படி பார்க்குது? பெண் என்பதால் இந்த தொழிலில் எதாவது கஷ்டம் அனுபவிச்சது உண்டா?

கண்டிப்பாக இல்லை. இந்த தொழிலில் இருப்பதால் சமுதாயத்தில் எனக்கு பிரச்னை என்று சொல்ல எதுவும் இல்லை. ஒருவேளை மற்றவர்களுக்கு இருக்கலாம். ஆனால் கடவுள் கிருபை அப்படி ஒரு கஷ்டம் எனக்கு இல்லை.  ஒன்று மட்டும் உணர்கிறேன்.. எதாவது ஒரு பிரச்னை வந்தால் ஒரு பெண் தான் இதை நடத்துகிறாள் ஆகவே இங்கு வீண் பிரச்னை வேண்டாம் என்று சொல்பவர்கள் தான் நான் பார்த்திருக்கிறேன். இது எனக்கு மிக பெரிய வெற்றி. அப்படி ஒரு கஷ்டம் இருந்தால் முன்னேறுவது ரெம்ப கஷ்டமான ஒன்று. இப்போ உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் எனக்கு சரீரத்தில் எவ்ளோ வலி இருக்கிறது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். ஆகவே தொழிலில் வரும் கஷ்டத்தை சமாளிப்பதை விட சமுதாயத்தில் வரும் கஷ்டத்தை சமாளிப்பது தான் மிக பெரிய கஷ்டம். அந்த கஷ்டத்தை இறைவன் எனக்கு தரவில்லை. அந்த வகையில் நான் பாக்கியசாலி.



இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்க யாருக்கெல்லாம் நன்றி சொல்ல விரும்புறீங்க.

முதலாவது குரு நாதர், அடுத்த படியாக என் பெற்றோர், என் சகோதர சகோதரிகளுக்கு நன்றி சொல்றேன். குறிப்பாக தொழில் ரீதியாக ஆலோசணை தந்து உதவிய  எனது நண்பர் திரு. பெருமாள் அவர்களுக்கும் அனைத்து வேலைகளிலும்  உடன் உதவியாக இருந்த திரு லோகநாதன் அவர்களுக்கும் நன்றி சொல்றேன். திரு லோகநாதன் அவருடைய மனைவிக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு குடும்ப சூழ்நிலைகள் இருந்தாலும் தொழில் திறம்பட நடந்திட உழைத்திடும் உடன் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி.

நம்ம ஊர் நாயகர் நிகழ்ச்சி பற்றிய தங்கள் கருத்து

ஒவ்வொரு ஊரிலும் அநேக கலைஞர்கள் இருக்கிறார்கள். அதில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தங்களுடைய கடின உழைப்பின் அடிப்படையில் வாழ்க்கையில் தொழிலில்  முன்னேறிய கலைஞர்களை கண்டுபிடித்து  அவர்களிடம் முன்னேற்றத்தின் காரணங்களை கேட்டு அறிந்து அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்வது மிகுந்த சந்தோஷம்.  எங்களை போன்ற கலைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சி "தாகத்தோடு இருப்பவர்களுக்கு தண்ணீர் கிடைப்பது" போன்ற ஒரு சந்தோஷம். குறிப்பாக ஒரு பூஸ்டர் போல் காணப்படுகிறது.  ஆகவே எங்கள் மனமார்ந்த நன்றி.











Saturday 21 October 2017

சங்கர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியருக்கு கவிதைச் செல்வர் விருது.



சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியனுக்கு காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் கவிதைச் செல்வர் விருது வழங்கப்பட்டது.

மஹா சுவாமிகள் அதிஸ்டானம் , குருவார வழிபாட்டு மன்றம் கவிதை உறவு இணைந்து காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் கவிதைக்கு மரியாதை என்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் சிறந்த 7 கவிஞர்களுக்கு கவிதைச் செல்வர் விருது வழங்கப்பட்டது.

கவிதைச் செல்வர் விருதினை ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமிழாசிரியர் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியனுக்கு வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்கள். விழாவில் கவிதை உறவு நிறுவனர் கலைமாமணி கவிஞர் ஏர்வாடி. எஸ். ராதாகிருஷ்ணன், குருவார வழிப்பாட்டு மன்ற அமைப்பாளர் புலவர் வை. இராஜேந்திரன், பேராசிரியர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


விருது பெற்ற தமிழாசிரியரை பள்ளி கல்விக்குழுத் தலைவர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் ஆலை இணைத்தலைவர் எஸ். சண்முகம், பொது மேலாளர் (மனிதவளம்) இரா. ஏகாம்பரம், பள்ளி தலைமை ஆசிரியர் உ. கணேசன்,உதவி தலைமை ஆசிரியர் ஆ. ரெங்கநாதன் மற்றும் ஆசிரியப் பெருமக்கள், மாணவ- மாணவியர் பாராட்டினர். 

புதூரில் டெங்கு விழிப்புணர்வு முகாம்




ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக புதூரில் டெங்கு விழிப்புணர்வு முகாம்.

சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக புதூரில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் திரு.மணிமாறன் முன்னிலை வகித்தார். டெங்கு விழிப்புணர்வு முகாமை ஊர் நிர்வாகிகளான திரு.பால்ராஜ், திரு.நடராஜன் மற்றும் திரு.மாரிபாண்டி ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் SCAD Project Development Officer திரு.முருகன் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறினர். மேலும் நிலவேம்பு குடிநீரை தினமும் காலையிலும், மாலையிலும் 30 மில்லி லிட்டர் வீதம் வெறும் வயிற்;றில் மூன்று வாரங்கள் தொடர்ந்து குடித்தால் டெங்கு மற்றும் வைரஸால் பரவக்கூடிய காய்ச்சலை எளிதில் தடுத்து விட முடியும். காய்ச்சலால் பாதித்தவர்கள் மட்டுமல்லாது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நிலவேம்பு குடிநீரை பருகி வந்தால் நல்ல பயன் கிடைக்கும். இதன் தொடர்ச்சியாக அனைத்து இடங்களையும் மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

இம்முகாமின் அனைத்து ஏற்பாடுகளை SCAD Project ஒருங்கிணைப்பாளர் திருமதி.பார்வதி மற்றும் திருமதி.மஞ்சுளா ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாமாண்டு துறைத்தலைவர் திரு.கலைக்கோ, பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி திரு. ஆரோக்கியராஜ் பொது மக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.



ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு.



மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. அதில் சேர விரும்புவோர் விண்ணபிக்க வருகிற 31 ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா நூற்றாண்டு குடிமை பணிகள் பயிற்சி மைய இயக்குனர் எஸ். மூக்கையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய குடிமைப் பணிகளுக்காக முதல்நிலை தேர்வுக்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் பல்கலைக்கழக இளைஞர் நல படிப்பியல் துறையினரால் தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் அண்ணா நூற்றாண்டு குடிமை பணிகள் பயிற்சி மையம் சார்பில் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு நடைபெறும் முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான தெரிவு தேர்வு அடுத்த மாதம் (நவம்பர்) 12 ம் தேதி நடைபெற உள்ளது. 

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 1.8.2018 – ல் 21 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். தெரிவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல் 1௦௦ நபர்கள் தமிழ்நாடு அரசின் இனச்சுழற்சி முறையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கான பயிற்சி வருகிற டிசம்பர் மாதம் 4 ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு 2௦18 ஜூன் மாதம் 2 ம் தேதி வரையில் நடத்தப்படும். இக்காலங்களில் இவர்களுக்கு பயிற்சி, தங்கும் இடம், உணவு, பயிற்சி படிப்பு, சாதனங்கள் அனைத்தும் இலவசமாகும். பயிற்சியில் சேர விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழக வலைத்தளமான www.mkuniversity.org லிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். விண்ணபதாரரின் படிப்பு, வயது, பிறந்த தேதி, இனம், நிரந்தர முகவரி ஆகியவற்றிற்கான சான்றிதழ்களின் நகல்களை மனுவுடன் இணைத்து அனுப்ப வேண்டும். ரூ.5 அஞ்சல் முத்திரை ஒட்டப்பட்ட மற்றும் சுய முகவரி எழுதப்பட்ட 2 அலுவலக கவர்கள் இணைத்து அனுப்ப வேண்டும். 

அஞ்சல் கவர்களின் மேல் CSAT 2௦18 கான பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டு பயிற்சி இயக்குநர், அண்ணா நூற்றாண்டு குடிமை பணிகள் பயிற்சி அகடாமி இளைஞர் நல படிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை – 625021. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற அக்டோபர் மாதம் 31 ம் தேதி ஆகும். காலம் கடந்து அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

இப்பயிற்சி மையத்தில் ஏற்கனவே முதல்நிலை தேர்வுக்கு முழுநேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் மேலும் விவரங்களுக்கு 0452-2458231, 98656 55180. ஆகிய எண்களை தொடர்புகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Wednesday 18 October 2017

நெல்லையில் ரோட்டரி பவள விழா



திருநெல்வேலி ரோட்டரி சங்கத்தின் 75வது பவளவிழா ஆண்டின் துவக்க விழா பாளையம்கோட்டை குலவணிகர்புறம் ஐ ஜி எஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. 

விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் சங்க தலைவர் சொக்கலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி ரோட்டரி சங்க பவள விழா கொண்டாட குழு கமிட்டி தலைவர் மெல்கியோ தலைமை தாங்கினார். வருங்கால தலைவர் பரமசிவன்உதவி ஆளுநர் யூசுப் ராஜா,முன்னாள் தலைவர்கள் ஜெரால்டு செல்வராஜ் , ஜனார்த்தனன், தனிஷ்க் ஹரி கிருஷ்ணன் மற்றும் பூர்ணலிங்கம் முன்னிலை வகித்தனர். 

பவள விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீலங்காவை சேர்ந்த அகில உலக ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கே ஆர் ரவீந்திரன் கலந்து கொண்டு பவள விழா நினைவாக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் அமையயுள்ள ரோட்டரி கடிகார கோபுர மாதிரி மற்றும் அதன்  அடிக்கல் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து பவள விழா மலரை அவர் வெளியிட ரோட்டரி ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா பெற்று கொண்டார்.


 கே ஆர் ரவீந்திரன் சிறப்புரையாற்றுகையில் ,"இன்று உலக அளவில் ரோட்டரி சங்கங்கள் மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றிவருகிறது.  சேவையாற்றுதல் என்பது இறைவனுக்கு தொண்டு புரிவதை போல . அதைத்தான் மஹாத்மா காந்தி மற்றும் புனிதர் அன்னை தெரசா ஆகியோர் செய்தனர். அதை போல் ரோட்டரி இயக்கமும் உலக அளவில் ஏராளமான பொது சேவைகளை செய்து வருகின்றது. ரோட்டரி சங்கத்தினர் தன்னலமற்ற சேவையாற்ற தன்னை தயார்படுத்தி கொள்ளவேண்டும .இன்று உலக அளவில் போலியோ நோயை ஒழித்ததில் ரோட்டரி சங்கம் பெரும் பங்கு வகிக்கிறது . இதனை கருத்தில் கொண்டு  ஏழை எளியோர்க்கு  ரோட்டரி சங்கத்தினர்  சேவை புரிய வேண்டும் என பேசினார். 

நிகழ்ச்சியில் 3212 மாவட்டமுன்னாள்  ரோட்டரி ஆளுனர் கணபதி, ஆளுநர் தேர்வு ராஜகோபாலன்,வருங்கால ஆளுநர் ஷேக் சலீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதனை அடுத்து திருநெல்வேலி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதன்மை கொடையாளராக (மேஜர் டோனர்) மெல்கியோ அவர்கள் ரோட்டரி பவுண்டேசனுக்கு நிதியினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுனர்கள் , முன்னாள் உதவி ஆளுநர்கள், பல்வேறு  பகுதி  சங்க தலைவர்கள்,செயலர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பவள விழா கமிட்டியினர்  மெல்கியோ தலைமையில்  சொக்கலிங்கம்,, ஆவுடையப்ப குருக்கள்ஜெரால்டு ,பரமசிவன்,சங்கரசுப்பு, மனோவ ராஜா ,சரவணன் மாணிக்கம், புகழேந்திரன் கமாக் , குணசீலன், அந்தோணி, விவேக்  உள்பட பலர் செய்து இருந்தனர்.

நிறைவாக பவள விழா கமிட்டி துணை தலைவர்  தனிஷ்க் ஹரி கிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Monday 16 October 2017

நெல்லை அபயம் மறுவாழ்வு மையத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா.




நெல்லை அபயம் மறுவாழ்வு மையத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா பாளையங்கோட்டை, குலவணிகர்புரத்தில் உள்ள அபயம் அரங்க வளாகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் அபயம் மாணவர்கள் தமிழ்தாய் வாழ்த்து பாடல்களுடன் துவங்கியது. திருநெல்வேலி அன்னை ஹாஜிரா கல்லூரி தலைவர் செய்யது அகமது, அபயம் அப்துல்கபூர் தலைமையில் ஆண்டறிக்கை வாசித்தார். காஜா எண்டர்பிரைசஸ்ஸின் இணை நிர்வாக இயக்குநர் அப்துல் அஜீஸ் அறிமுக உரையாற்றினார். காஜா எண்டர்பிரைசஸ் இயக்குநர் அன்வர் ஹ§சேன் முன்னிலை வகித்தார். புஷ்பலதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் புஷ்பலதா பூரணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா பேரூரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். 

மேலும் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கர் நிறைவு விழாவில் வாழ்த்தி பேசினார். அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுபாஷ்சந்திரன், மருத்துவக் கல்லூரி மருத்துவர் ராஜசேகரன், மருத்துவர்கள் அப்துலுரகுமான், சங்கரநாராயணன், சுந்தரபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிறைவாக அபயம் மறுவாழ்வு மையத்தின் மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பந்தல் அமைக்கும் பணிகளுக்கான பூஜை




 திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்றம் அருகில் பெல் மைதானத்தில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பந்தல் அமைக்கும் பணிகளுக்கான பூஜை மற்றும் பந்தல் கால்கோள் விழா (16.10.2017) நடைபெற்றது.

 இவ்விழாவில், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.செல்லூர் ராஜூ அவர்கள், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்கள், மாண்புமிகு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு, பந்தல் கால் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தனர். பின்னர், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-

மாண்புமிகு இதயதெய்வர் புரட்சித்தலைவி அம்மாசட்டமன்ற தேர்தலின் போதுபாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.  நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்கள். அதனடிப்படையில்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 30.06.2017 அன்று மதுரையில் தொடங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் 2வது வாரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நூற்றாண்டு விழா மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. நூற்றாண்டு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் , மாவட்ட மக்களுக்கு பயன்தரும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்கள். மேலும், பல புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கவுள்ளார்கள். விழா அரங்கு அமைப்பதற்கான பந்தல் பணிகள் கால்கோள் விழா இன்று சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் .சந்தீப் நந்தூரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் .கே.ஆர்.பி.பிரபாகரன், எஸ்.முத்துக்கருப்பன்,வசந்தி முருகேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் .ஆர்.முருகையாபாண்டியன், .செல்வமோதன்தாஸ்பாண்டியன், மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் .பூ.முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .ஆ.பழனி, திருநெல்வேலி கோட்டாட்சியர் திருமதி.மைதிலி, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணைய தலைவர் சக்திவேல்முருகன், மாநில கூட்டுறவு இணைய துணைத் தலைவர் .தச்சை கணேசராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சுப்பையாபாண்டியன்மாநில தாய்கோ வங்கி துணைத் தலைவர் குற்றாலம் .சேகர், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணைத் தலைவர் .கண்ணன் (எ) ராஜூ, ஆவின் தலைவர் ரமேஷ், நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆறுமுகம், அக்ரோ தலைவர் மகபூப்ஜான், முக்கிய பிரமுகர்கள் சுதா பரமசிவம், .பரணி சங்கரலிங்கம், .கே.ஜெ.சி.ஜெரால்ட், திரு.சேர்மபாண்டி, திரு.யூ.எஸ்.ஏ.வெங்கடேசன், .இ.நடராஜன் உள்பட அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.