மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday 27 November 2017

நெல்லையில் நாம் தமிழர் கட்சியினர் இரத்ததானம் வழங்கினார்கள்



பிரபாகரனின் 63வது பிறந்த நாள் விழா நெல்லையில் நாம் தமிழர் கட்சியினர் இரத்ததானம் வழங்கினார்கள்.


தமிழ் தேசிய இயக்க தலைவர் பிரபாகரனின் 63வது பிறந்த நாள் விழா முன்னிட்டு பாளை அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக இரத்ததானம் நடைபெற்றது. 

இம்முகாமிற்கு தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், நெல்லை மாவட்ட தலைவர் சக்திபிரபாகன், மத்திய மாவட்ட செயலாளர் கண்ணன், மத்திய மாவட்ட மகளிரணி பாசறை செயலாளர் சுதாதர்மசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 நாம் தமிழர் கட்சியை சார்ந்த 60க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் கலந்து கொண்டு இரத்தாம் வழங்கினார்கள்.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


இறையோக உயிர் வளர்கலை பயிற்சி மையத்தின் 4ம்ஆண்டு துவக்க விழா.





நெல்லையில் இறையோக சார்பில் பெருமாள்புரத்தில் உயிர் வளர்கலை பயிற்சி மையத்தின் 4ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது இவ்விழாவில் உலக நலவள மேன்மைக்கான சித்தர் முறை தரணிசேம யாகம், தனிநபர் வேண்டுதல்களை நிறைவேற்றும் காரிய சித்தி நவக்கிரக யாகம் மற்றும் தவம், ஜோதிட உலகில் முதன்முதலாக இறையோகா அறிமுகப்படுத்திய புதிய பிரசன்ன முறையான கதிபிரசன்னம். 

கேள்வி பதில் கலந்துரையாடல், கலைநிகழ்ச்சிகள், இறைசேவகர் அறிமுகம், பரிசளிப்பு விழா மற்றும் கௌரவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்தர்களின் ஜால வித்தைகளை யோகி ஜெ.மதன் நடத்தினார். இறையோகா நிறுவனர் குமரன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் கண்ணன், அறங்காவலாகள்; மார்கோஸ், ஜெகதீசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இறையோகா செயலாளர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். இறையோகா ஜோதிட கலை தலைவர் முருகராஜன் நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


மத ஓருமைப்பாட்டை வலியுறித்தி யோகாசனம் மூலம் கார்த்திகை தீபம் ஏற்றிய இஸ்லாமியர்





நெல்லையில் மத ஓருமைப்பாட்டை வலியுறித்தி யோகாசனம் மூலம் கார்த்திகை தீபம் ஏற்றிய இஸ்லாமியர் சாதனை நிகழ்த்தினார்புதுதில்லி இன்டர்நேஷனல் நேச்சுரோபதி மற்றும் கடையநல்லூர்  இன்டர் நேசனல் பள்ளி சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் இணைந்து  மத ஓருமைப்பாட்டை வலியுறித்தி  யோகாசனம் நிகழ்ச்சி நடத்தியது.

 இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர்  இன்டர் நேசனல் பள்ளி தாளாளர் முகம்மது  ஹபீபுயோகாசனம் மூலம்   கார்த்திகை தீபம் ஏற்றிய சாதனை புரிந்தார்முன்னதாக சுவாமி விவேகானந்தா  யோகா ஸ்கேட்டிங்    கழக   மாவட்ட தலைமை பயிற்சியாளர் பாக்கியராஜ் வரவேற்று பேசினார்.  

சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக நிறுவன  தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்விடிவெள்ளி கல்வி அறக்கட்டளை  நிறுவனர் ஆம்ஸ்ட்ராங்  .எஸ்..கராத்தே குங்ஃபூ  கழக நிறுவனர்  ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்நிறைவாககடையநல்லூர் இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியர் கமரூதீன் நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


Friday 24 November 2017

பாளை மகாராஜ நகர் ஸ்ரீமஹாசக்திரூப ஆஞ்சநேயர் முதலாமாண்டு கும்பாபிஷேகம்





பாளை மகாராஜ நகர் ரெயில்வே பீடர்ஸ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீமஹாசக்திரூப ஆஞ்சநேயர்திருக்கோவிலின்முதலாமாண்டு கும்பாபிஷேகம் வெகு  விமர்சையாக நடைபெற்றது  21-11-2017 அன்றுகாலை 8மணிக்கு  கும்பபூஜை மற்றும் அதனை தொடர்ந்து    சிறப்பு   ஹோமங்கள்   பூர்ணாஹீதி   நடைபெற்றது

10.30.மணிக்கு மேல் ஸ்ரீமகாசக்தியேரூபஆஞ்சநேயர் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.மதியம் 12மணிக்கு அன்னதானமும் மாலை மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனைகள் சிறப்பு அலங்கார   தீபாராதனைகள்   நடைபெற்றது


இக்கோவலில் குறித்த வரலாறுவருமாறுதிருநெல்வேலி மாநகராட்சி   மகாராஜ நகர் உழவர் சந்தை இரயில்வே கேட் மிக அருகில்    பீடர்ஸ்   மெயின்ரோட்டில் இத்திருத்தலம் அமைந்துள்ளதுகடந்த 30 வருடங்களுக்குமேலாக இத்திருத்தலம் எந்த விதமான கட்டிடபணிகளும் செய்ய   இயலவில்லைசில ஆன்மீக நண்பர்கள் மூலம்என்னவென்று யோசிக்கும் போது இத்தலத்தில்பகவான் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட வேண்டும்   என்று வந்ததுஎனவே கோவில் பணியை ஆரம்பிக்கும் போதேசில அதிசயங்களும் நிகழ்ந்தனஇடத்தை தூய்மை செய்யும் போதும்சுவாமிக்கு விக்ரகம்   அமைக்கும் போதுபூஜைக்கான ஏற்பாடு கோவில் கும்பாபிஷேகம் போன்ற  முக்கிய நிகழ்வுகள்யாவும் திட்டமிடாமல் ஆஞ்சநேயர்ஜெயந்தி மற்றும்   சுவாமியின் மூல நட்சத்திர நாளிலேயே அமைந்தது.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் வானவில் தினம்




தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் வானவில் தினம் கொண்டாடப்பட்டதுமழலையர்கள் வானவில்லின்வண்ணமான ஏழு வண்ணங்களில்   ஆடைகளை அலங்கரித்துக்கொண்டு வலம் வந்து வானவில்லின் பிரதிபலிப்பைகொண்டுவந்தனர்.  விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளி தாளாளர்   செந்தில்பிரகாஷ் மற்றும் இயக்குநர் திலகவதிஆகியோர் கலந்து கொண்டு   சிறப்பித்தனர்

மழலையர்களின வானவில் தோற்றத்தைப்பார்த்து வியந்து கூறுகையில் நமது  தட்பவெட்ப நிலைகளில்   வானவில் தோன்றுவது ஒருவகை  காலத்தை குறிக்கிறதுபொதுவாக மழைக்காலங்களில் இது    எவ்வாறு  தோன்றும்  என்ற இயற்பியல் சோதனைகளும் நடத்தப்பட்டு வானவில்லின் வண்ணங்களின்  விப்ஜிஆர்    வரிசைகளையும் உருவாகும் விதத்தையும்  எடுத்துரைத்தார்இதில் பள்ளி முதல்வர் சோமசுந்தரி,   மேலாளர்  செல்வராஜ்ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்கள்கலந்துகொண்டனர்.  

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.


நெல்லை மணிமண்டபத்தில் வ.உ.சி. சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை




சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள்  கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.  சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 


இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தூத்துக்குடியில் இருந்து நெல்லை வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் நெல்லை மணிமண்டபத்தில் உள்ள வ.உ.சி.சிலைக்கு, டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவருக்கு மேள தளங்கள் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ.

மாநில மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்.பி., அமைப்பு செயலாளர்கள் கல்லூர் வேலாயுதம், ஆர்.பி.ஆதித்தன், மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் துணை மேயர் கணேசன், மாநகர் மாவட்ட பொருளாளர் பால்கண்ணன், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் சுரேஷ்குமார், நிர்வாகிகள் செல்வமணி, கொம்பையா, செல்வசேகர், சண்முகம், குருநாதன்பிள்ளை, செல்வராஜ், மாயாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படம் 
திரு. முத்து.



திருநெல்வலேி ரேட்டரி சங்கம் சார்பாக இரத்ததானம் வழங்கும் விழா




அரசு மருத்துவமனையில் வைத்து திருநெல்வலேி ரேட்டரி சங்கம் சார்பாக இரத்ததானம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைவர் சொக்கலிங்கம்,  செயலர் ஆவுடயைப்பன் மற்றும் உறுப்பினர்கள், டாக்டர் கண்ணன், அந்தோணிபாபு, குணசீலன்  ஆகியோ் கலந்து கொண்டனர்.


 இரத்ததான முகாமினை உதவி ஆளுநர் யுசுப்ராஐா தொடங்கி வைத்தார்.  முகாமிற்கான ஏற்பாடுகளை  பல் மருத்துவர் டாக்டர் கண்ணன்  செய்தார். இம்முகாமில் 25 நபர்கள் இரத்ததானம் வழங்கினா்கள்.

செய்தி மற்றும் படம் 
திரு. சரவணவேல்.