மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 21 August 2017

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கல்லூரி சந்தை



திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மகளிர் திட்டத்தின் மூலம் கல்லூரி சந்தை மகளிர் சுய உதவி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.08.2017) துவக்கி வைத்தார்.

கல்லூரி சந்தை கண்காட்சியினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்; மகளிர் சுய உதவிக்குழுக்களின் கைவினை உற்பத்தி பொருட்கள் 21.08.2017 முதல் 23.08.2017 வரை மூன்று நாட்களுக்கு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற உள்ளது. இக்காட்சியில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில்  ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 27 மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.  இக்கல்லூரி சந்தையில் ஊரக பகுதிகளிலுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், கற்றாழை நார் உற்பத்தி பொருட்கள், பனை ஓலை பொருட்கள், அலங்கார சணல் பைகள், மகளிருக்கு தேவையான துணிகள் மற்றும் செயற்கை ஆபரங்கள், சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டு பொருட்கள், இயற்கை உணவு வகைகள் மற்றும் பல வகையான பொருட்கள் உற்பத்தி செய்யும் விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. கல்லூரி மாணவ, மாணவிகளைக் கவரும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் மகளிர் திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு நகர் மற்றும் கிராமப்பகுதியில் உள்ள 7 கல்லூரிகளில் கண்காட்சி நடத்தப்படுகின்றது. கல்லூரி மாணவ, மாணவிகள் கண்காட்சியை கண்டுகளிப்பதுடன் அதிக அளவிலான பொருட்களையும் வாங்கி மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்கப்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

                இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் திருமதி.ஹெட்சி லீமா, கல்லூரி முதல்வர் பேராசிரியர் திரு.ரபி அகமது, உதவி திட்ட அலுவலர் திரு.முருகன், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் திருமதி.சுபா மற்றும் அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment