மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 15 August 2017

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சி



 பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் இன்று (15.08.2017) நடைபெற்றது.  நிகழ்ச்சியில் கல்லூரி பொறுப்பு முதல்வர் பேரா. கா. ரபி அகமது அவர்கள் கொடியேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சுதந்திரப் போராட்ட வீரர் திரு. வாஞ்சிநாதன் அவர்களின் குடும்ப வழித்தோன்றல் திரு. வாஞ்சி கோபாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகிய போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். 

இந்நிகழ்ச்சியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் கல்லூரியின் இளைஞர் நலத்துறையும் இணைந்து நடத்தின. நிகழ்ச்சியில் சாதனை புரிந்த தேசிய மாணவர் படை மாணவ-மாணவியர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 

 நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மாணவ-மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.  இவ்வாண்டு பணி நிறைவு  பெறக்கூடிய வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் பி.ஏ. அப்துல் கரீம் அவர்களுக்குப்  பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியை இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறை பேராசிரியருமான அ.மு. அயூப்கான் தொகுத்து வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ-மாணவியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் உடற்கல்வித் துறையின் புல முதன்மையரும் இயற்பியல் துறை பேராசிரியருமான திரு. அப்துல் காதர் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment