மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday, 30 August 2017

FX பள்ளிகளில் விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.

      

          வண்ணார்பேட்டை தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப்பபள்ளி மற்றும் பிரான்சிஸ் சேவியர் பள்ளிகளில் (CBSE)  இன்று (29.08.2017) பிரபல ஹாக்கி விளையாட்டு வீரர் தயான் சந்த் பிறந்த நாளை முன்னிட்டு  தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.

 பள்ளி மாணவர்களுக்கு இடையே கால்பந்து, கூடைபந்து, ஹாக்கி, எறிபந்து, வாலிபால், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் FX பொறியியல் கல்லூரியிலிருந்து வண்ணார்பேட்டையை  சுற்றி  தொடர் ஓட்டம் நடத்தினர்.  இத்தொடர் ஓட்டத்தினை  FX  நிர்வாக அதிகாரி திரு. கிருஷ்ண குமார் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார். 

விழாவிற்கான ஏற்பாட்டினை பள்ளி முதல்வர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


No comments:

Post a Comment