வண்ணார்பேட்டை,
பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில்
பேராசிரியர்களுக்கான சிறப்பு ஒருநாள் கருத்தரங்கு 19.8.17 அன்று சென்னை TCS நிறுவனத்தைச் சார்ந்த குழுவினரால் கல்லூரி
அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு
வந்;திருந்தவர்களை முனைவர் அரவிந்த் சாமிநாதன்
வரவேற்றார்.
இவ்விழாவில் ஸ்காட் நிறுவனர் முனைவர்
எஸ்.கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கி பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி
கௌரவித்தார். தனது தலைமை உரையில் “பேராசிரியர்கள் தங்களுடைய மன அழுத்தங்களை
களைந்து தகவல் தொடர்பு திறனை வளர்த்துக்
கொள்வதோடு மாணவ மாணவியரின் திறன்களை மேம்படுத்த இந்த வாய்ப்பினை நல்ல முறையில்
பயன்படுத்திக் கொள்ளுமாறு” கேட்டுக் கொண்டார்.
“தகவல் தொடர்பு திறன் மற்றும் மன அழுத்தம்
மேலாண்மை” என்ற
மையக்கருத்தின் அடிப்படையில் TCS நிறுவனத்தைச் சார்ந்த திரு. ஐசக் பிலிப், பாக்யலெட்சுமி ராதிகா, தீபிகா மற்றும்
ஸ்வேதா பாலம்பாள் ஆகியோர் பேராசிரியர்களை வெவ்வேறு குழுக்களாக பிரித்து
கருத்தமர்வுகளை நடத்தினர்.
இவ்விழாவிற்கு
கல்லூரி முதல்வர் முனைவர் வி.இளங்கோவன் முன்னிலை
வகித்தார். ஸ்காட் கல்வி குழுமங்களின்
பொது மேலாளர் திரு.இக்னேஷியஸ் சேவியர் வாழ்த்துரை வழங்கினர். இக்கருத்தரங்கு தங்கள் தகவல் தொடர்பு திறனை
வளர்க்க மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
விழாவின் இறுதியில் மின்னணு மற்றும் தகவல்
தொடர்பு துறைத்தலைவர் பேராசிரியை வேதப்பிரியா நன்றியுரை வழங்கினார். இவ்விழாவினை மேலாண்மைத்துறை மற்றும் முதுகலை
கணினி பயன்பாட்டுத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment