மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Sunday, 20 August 2017

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிப்பு - சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு.



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ததால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால்,சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. 

நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால்மெயின் அருவி (பேரருவி), ஐந்தருவி ஆகிய அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. 

வெள்ளிக்கிழமை இரவு  இரவு மெயின்அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி, ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் இரவு12 மணி முதல் காலை 6 மணி வரை மெயின் அருவியிலும், ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. 

சனிக்கிழமை காலைஅருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்கஅனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தென்காசி, குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படுவதுடன், மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. ஞாயிற்று கிழமையன்று  சுற்றுலா பயணிகள் கூட்டம்அதிகரித்து காணப்பட்டது


No comments:

Post a Comment