நெல்லை சந்திப்பில்
உள்ள மதுரைதிரவியம் தாயுமானவர் இந்து
கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 71
வது சுதந்திர விழா நடைபெற்றது. விழாவில் மதிதா இந்து மேல்நிலைப் பள்ளி செயலர்
திரு. A.L.S. சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்.
திருநெல்வேலி கல்விச் சங்க தலைவர்
திரு. S மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். . திருநெல்வேலி கல்விச் சங்க
பொருளாளர் திரு.B.T. சிதம்பரம், திருநெல்வேலி கல்விச் சங்க செயலர் திரு.
M.செல்லையா, திருநெல்வேலி கல்விச் சங்க நிர்வாககுழு உறுப்பினர் திரு. R.சுரேஷ்,
தலைமை ஆசிரியர் திரு. S.வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கெளரவ விருந்தினர்களாக
மெட்ரிக் பப்ளிகேஷன் நிர்வாக இயக்குனர் திரு.ஆ.ஜெகநாதன், மின்சார வாரியம் பணி
நிறைவு பெற்ற திரு. அரிமா.சங்கர கணபதி, மின்சார வாரியம் பணி நிறைவு பெற்ற திரு.அரிமா.
கண்ணன், மயூரி டிவி நிர்வாக இயக்குனரும் மயிலோசை இதழின் ஆசிரியருமான திரு.அரிமா.ஆறுமுக
நயினார், அருண் மருத்துவமனை மருத்துவர்.பாக்கியம் பார்வதி, மதிதா பள்ளி முன்னாள்
மாணவர் திரு.ஜி.செந்தில்குமார், வங்கிப் பணியாளர் பணிநிறைவு பெற்ற திரு.ஜி. சந்திர
பாபு, திருநெல்வேலி லாரி உரிமையாளர்கள் சங்கம் திரு. ஆ.தங்கராஜன், திருநெல்வேலி
மாநகராட்சி பணியாளர் திரு.ம. சொக்கலிங்கம், விராட் ஹிந்துஸ்தான் சங்கம் திரு. நல்லை
கோமான், ஸ்ரீ குழுமம் நிர்வாக இயக்குநர் திரு. சு.சுப்பிரமணியன், ஆதித்யா கார்
ஜுவல்லர்ஸ் உரிமையாளர் திரு. எஸ்.வி. சுரேஷ், மதிதா பள்ளி முன்னாள் மாணவர்
திரு.பழனிக்குமார் பாலாஜி சுவீட்ஸ் திரு.க.நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
வீரன் வாஞ்சிநாதன் வழித் தோன்றல் வேளாண்மைத்துறை பணிநிறைவு
திருவாளர். G.ஹரிஹர சுப்பிரமணியன் அவர்கள் சுதந்திர தின விழா கொடியேற்றி
மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதனை
தொடர்ந்து திருநெல்வேலி தினமலர் நிர்வாக இயக்குனர் திருவாளர்.V.V.R.தினேஷ் கெளரவ
விருந்தினர்களை கெளரவித்தார். சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ
மாணவியர்களுக்கு பரிசுகளை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் திருவாளர்.
A.L.S.லெட்சுமணன் வழங்கி சிறப்பித்தார்.
விழா நிறைவாக சுதந்திர தின விழா ஒருங்கிணைப்பாளர்
திரு.R.மார்கண்டன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர், ஆசிரிய –
ஆசிரியைகள், அலுவலர்கள் மற்றும் மாணவ – மாணவிகள் செய்திருந்தனர்.





No comments:
Post a Comment