திருநெல்வேலி மாவட்டம் பாளையில்
செங்கொடியின் 6ம்ஆண்டு நினைவு நாள் பல்வேறு
கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
1991 முதல் சிறையலிருக்கும் பேரறிவாளன் முருகன் நளினி சாந்தன்
இராபட்பயாசு ரவி ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி தீக்குளித்து உயிரிழந்த
செங்கொடிக்கு 6ம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்டம்
பாளை மார்கெட் மைதானத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்
பல்வேறு கட்சியினர் செங்கொடி உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழ்
தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கண்மணி மாவீரன் தலைமையில் நாம் தமிழர்கட்சி
மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, தமிழக மக்கள் சனநாயக கட்சி மாவட்ட செயலாளர்
அப்துல்ஜப்பார், நாம் தமிழர் கட்சி நெல்லை மண்டல செயலாளர் இராம்குமார், தமிழர்
விடுதலை கழகம் மாநகர் மாவட்ட செயலாளர் மணிப்பாண்டியன், மக்கள் போராட்ட குழு
நெல்சன் தமிழர் நற்பணி கழக மதன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி
தொடர்பாளர் முத்துவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
No comments:
Post a Comment