மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 25 August 2017

ஜம்புநதி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்.





நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  வியாழக்கிழமையன்று நடந்தது. ம.தி.மு.க. கீழப்பாவூர்  ஒன்றியசெயலாளர்  உதயசூரியன் தலைமையில்  விவசாயிகள்  ஆட்சியரிடம்  மனு கொடுத்தனர். 

அதில், “பாவூர்சத்திரம் பகுதியில்  ஜம்புநதி-  ராமநதி கால்வாய் இணைப்பு திட்டம் போடப்பட்டது.  பலஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினை இருப்பதாக கூறுகிறார்கள்.  இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த ஆட்சியர் நடவடிக்கை  எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது. 

நெல்லை தொகுதி எம்.எல்.ஏ.லட்சுமணன் ஆட்சியர்  சந்தீப் நந்தூரியை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறும்போது, “எனது தொகுதிக்கு உட்பட்ட கன்னடியன்  கால்வாய்  பகுதியில் சில இடங்களில் விவசாயிகள் பாசனத்துக்காக  மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இதை நிறுத்த வேண்டும் எனஅதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்“ என்றார்.

No comments:

Post a Comment