தென்காசி அருகே குடிநீர் வழங்க கோரி, பெண்கள்
செவ்வாய்கிழமையன்று நூதன போராட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டம் தென்காசி அருகே
உள்ள சுந்தரபாண்டியபுரம் கிராமத்தில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில்
குடிநீர் சீராக கிடைப்பதில்லை. மேலும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பல வீடுகளில்
குடிநீர் குழாய் இணைப்புகளில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதாகவும்
கூறப்படுகிறது.
எனவே, பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்க வேண்டும் எனக் கோரி
சுந்தரபாண்டியபுரம் நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பெண்கள் செவ்வாய்கிழமையன்று
காலிக் குடங்களுடன் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, குடங்களை தரையில்
நடுவில் வைத்து அதனை சுற்றி ஒப்பாரி வைத்து கோஷமிட்டனர்.

No comments:
Post a Comment