பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் முதுகலை வரலாற்று துறை
சார்பாக ஒரு நாள் தேசிய கருத்தரங்கு “சமூக நீதி”
என்ற தலைப்பில் இன்று (24.08.2017) காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இந்திய சமூகத்தைப் பொருத்த அளவில் சமூக
நீதி போராட்டம் என்பது இருபதாம் நூற்றாண்டில் வீறுகொண்டு நடைபெற்றது. தந்தை
பெரியார், ஜோதி ராவ் பூலே, அம்பேத்கர், முத்து லட்சுமி ரெட்டி போன்ற பல்வேறு
ஆளுமைகள் சமூக நீதி போராட்டங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில், வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் எம். நசீர் அகமது அவர்கள்
அனைவரையும் வரவேற்றார். கல்லூரி பொறுப்பு முதல்வர் பேராசிரியர் கே. ரபி அகமது
தலைமையுரையாற்றினார். கல்லூரியின் அரசுதவிபெறாப் பாடப்பிரிவுகளின் இயக்குநர்
முனைவர் ஏ. அப்துல் காதர், வரலாற்றுத் துறையின் மேனாள் துறைத்
தலைவர்கள் முனைவர் ஏ. முஹம்மது ஹ{சேன் மற்றும் முனைவர் என் முஹம்மது ஹ{சேன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கேரளாவின் கோழிக்கோடு
பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் ஏ. முஹம்மது மாஹீன்
நிகழ்ச்சியை துவக்கிவைத்து மைய உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் முதலாம் அமர்வில் ம.தி.த. இந்து கல்லூரியின்
வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் ஏ. திருநீலக்கண்டன் அவர்கள் “திராவிட இயக்கமும் நவீன தமிழ் சமூகமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின்
முன்னாள் வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் ஏ. அசரப் அலி அவர்கள் தமிழகமும் இட
ஒதுக்கீடு கொள்கையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் மூன்றாம் அமர்வில் “கல்வியும் சமூக மாற்றமும்” என்ற தலைப்பில்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் (பொறுப்பு) முனைவர்
இரா. ராமசுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
பல்வேறு கல்லூரிப் பேராசிரியர்கள்
மற்றும் மாணவர்கள் சமூக நீதி தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதி உரையாக ஆதித்தனார் கலையறிவியல் கல்லூரியின் முன்னாள் ஆங்கிலத்
துறைத் தலைவர் சேவியர் அமல்ராஜ் அவர்கள் முடிவுரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முதுகலை வரலாற்றுத் துறைத் பேராசிரியர்களான
முனைவர் எம். நசீர் அஹமது, முனைவர் ஏ.ஹெச். முஹைதீன் பாதுஷா,
திரு. ஏ. அப்துல் அஜீஸ், திருமதி. ஜே. ஜெமி மெர்லின் ராணி, திரு. எம். ஷாஹுல் ஹமீது, முனைவர் சி. ஆஷா,
திருமதி எஸ். முஹம்மது மதீனா, திரு. ஏ. சிந்தா மதார் மற்றும் திருமதி கே. ரகு ஜகதீஸ்வரி ஆகியோர்
சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:
Post a Comment